சாந்தா காந்தி

சாந்தா காளிதாசு காந்தி (Shanta Kalidas Gandhi 20 டிசம்பர் 1917 - 6 மே 2002) ஓர் இந்திய நாடக இயக்குனர், நடனக் கலைஞர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார், அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சார பிரிவான ஐபிடிஏவுடன் இனைந்து பங்களிப்புகளை மேற்கொண்டுள்ளார். அவர் 1930 களின் முற்பகுதியில் இந்திரா காந்தியுடன் ஒரு குடியிருப்பு பள்ளியில் பயின்றார், மேலும் பிற்கால வாழ்க்கையில் பிரதமருடன் இணைந்து இருந்தார். இந்திரா காந்தி நிர்வாகத்தின் கீழ் பத்மசிறீ (1984) மற்றும் தேசிய நாடகப் பள்ளி (1982–84) தலைவராக நியமிக்கப்பட்து உட்பட பல அரசு விருதுகள் மற்றும் கௌரவங்களை அவர் பெற்றார்.

அவர் நடிகை தினா பதக் மற்றும் தார்லா காந்தி ஆகியோரின் சகோதரி ஆவார், மேலும் ஒரு மேடை கலைஞரும் ஆவார்.

பின்னணி

அவர் இந்திய மக்கள் நாடகச் சங்கத்தின் (ஐபிடிஏ) மத்திய பாலே குழுவின் நிறுவனர்-உறுப்பினராக இருந்தார், மேலும் 1950 களில் நாடு முழுவதும் பரவலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒரு நாடக ஆசிரியராக ,குறிப்பாக பண்டைய இந்திய நாடகம் புதுப்பிப்பதில் முன்னோடியாக நினைவுகூறப்படுகின்றார் . ரசியா சுல்தான் இவரது படைப்புகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. [1]

அவர் 1981 இல் நிறுவப்பட்ட கல்வி ஆதார மையமான அவேஹியின் நிறுவனர்-உறுப்பினராக இருந்தார், மேலும் தேசிய நாடகப் பள்ளியின் தலைவராகவும் இருந்தார், 1982-1984. [2] 1984 ஆம் ஆண்டில் இந்தியக் குடிமை விருதுகளின் ஒன்றான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.2001 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது இயக்கத்திற்காக வழங்கப்பட்டது.இந்த விருதினை தேசிய சங்கீத இசை, நடன மற்றும் நாடக அகாதமி இவருக்கு வழங்கியது.[3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

1932 இல் புனேவில் உள்ள ஒரு சோதனை குடியிருப்பு பள்ளியில் சேர்ந்தார், அங்கு அவர் வகுப்பு தோழர் இந்திரா நேருவுடன் நண்பரானார். [4] 1930 களில் இடதுசாரி மாணவர் இயக்கத்தில் அவர் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை அவளது பொறியாளர் தந்தை கண்டறிந்து, மருத்துவம் படிக்க இங்கிலாந்துக்கு அனுப்பினார். பின்னர் அவர் மும்பைக்குச் சென்றார்.  லண்டனில் அவர் ஃபேர்ஃபாக்ஸ் சாலை அருகே உள்ள உணவகத்தில் தங்கினார். பெரோஸ் காந்தி இருந்த இடத்தின் அருகில் வசித்தார், அவர்கள் மூவரும் ஒன்றாக ஊருக்கு வெளியே செல்வார்கள். [5] 1936 இல் இந்திராவும் ஃபெரோசும் இரகசியமாக நிச்சயதார்த்தம் செய்தபோது, சாந்தா மட்டுமே அதைப் பற்றி அறிந்திருந்தார். [6] விரைவில் அவர் இந்தியா ஹவுசில் கிருஷ்ண மேனன் மற்றும் அவரது இளம் ஃப்ரீ இந்தியா கூட்டாளிகளை பலமுறை சந்தித்தார், மேலும் எசுப்பானிய உள்நாட்டுப் போருக்கு நிதி திரட்ட ஒரு நடனக் குழுவில் சேர்ந்தார். ஆனால் அவருடைய தந்தை ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் துவங்க இருந்த காரணத்தினால் அவளை திரும்ப அழைத்தார்.

தொழில் வாழ்க்கை

அவர் உதய சங்கரின் 'உதய் சங்கர் இந்தியா கலாச்சார மையத்தில் சேர்ந்தார். இது உத்தரகாண்டில் உள்ள அல்மோராவிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. மற்றும் ஒரு ஆசிரியரிடம் பரத முனியின் நாட்டியசாஸ்திரத்தைப் படித்தார். அந்த மையம் 1942 இல் மூடப்படும் வரை அவள் அங்கேயே இருந்தார். [7] அவர் தனது இளம் சகோதரிகளான தினா பதக் (1922-2002) மற்றும் தார்லா காந்தியுடன் சேர்ந்து பம்பாயில் (இப்போது மும்பை) இந்திய மக்கள் நாடக சங்கத்தின் நடனப் பிரிவான லிட்டில் பாலே குழுவின் முழுநேர உறுப்பினரானார். அந்தக் குழு இந்தியா, இம்மார்டல், மேன் அண்ட் மெசின் மற்றும் பல வகையான கூட்டு நடன இசைகளை 1950 ஆம் ஆண்டுகளில் ரவி சங்கர் , சாந்தி பர்தன் மற்றும் பல இசைக் கழஞர்களுடன் இந்தியா முழுவதும் பயணம் செய்து உர்வாக்கினார்கள். பின்னாளில் இவர்கள் பரவலாக அறியப்பட்ட கலைஞர்களாக ஆயினர். பம்பாயில் குஜராத்தி தியேட்டரின் மறுமலர்ச்சியில் இந்த சகோதரிகள் பல ஆண்டுகளாக ஈடுபட்டனர். [8]

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=சாந்தா_காந்தி&oldid=18794" இருந்து மீள்விக்கப்பட்டது