சல்மான் ருஷ்டி

சர் அகமது சல்மான் ருசிடி (Sir Ahmed Salman Rushdie; பிறப்பு: 19 சூன் 1947) இந்தியாவில் பிறந்த பிரித்தானிய-அமெரிக்கபெழுத்தாளர் ஆவார்.[1] இவரது பணி பெரும்பாலும் வரலாற்றுப் புனைகதைகளுடன் மந்திர யதார்த்தத்தை ஒருங்கிணைக்கிறது, முக்கியமாகக் கிழக்கு, மேற்கத்திய நாகரிகங்களுக்கிடையேயான தொடர்புகள், இடையூறுகள், இடம்பெயர்வுகள், ஆகியவை இந்தியத் துணைக்கண்டத்தைக் களமாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

சல்மான் ருஷ்டி
Salman Rushdie 2018.jpg
இயற்பெயர் சல்மான் ருசிடி
Salman Rushdie
பணி
  • எழுத்தாளர்
  • பேராசிரியர்
குடியுரிமை
  • ஐக்கிய இராச்சியம்
  • ஐக்கிய அமெரிக்கா (2016 முதல்)
கல்வி கிங்குசு கல்லூரி, கேம்பிரிட்ச் (பி.ஏ)
வகை
  • மந்திர யதார்த்தவாதம்
  • நையாண்டி
  • பின்காலனித்துவம்
கருப்பொருள்
குறிப்பிடத்தக்க விருதுகள்
துணைவர்
  • கிளாரிசா லுவார்டு
    (தி. 1976; ம.மு. 1987)
  • மேரியான் விகின்சு
    (தி. 1988; ம.மு. 1993)
  • எலிசபெத் வெசுட்
    (தி. 1997; ம.மு. 2004)
  • பத்மா லட்சுமி
    (தி. 2004; ம.மு. 2007)
பிள்ளைகள் 2
இணையதளம் salmanrushdie.com

ருசிடியின் இரண்டாவது புதினம் நள்ளிரவின் சிறுவர்கள், 1981 இல் புக்கர் பரிசை வென்றது, அத்துடன் இப்புதினம் இரண்டு சந்தர்ப்பங்களில் "அனைத்து வெற்றியாளர்களின் சிறந்த நாவலாக" கருதப்பட்டது. இவரது நான்காவது நாவலான த சாத்தானிக் வெர்சசு (1988) வெளிவந்த பின்னர், ருஷ்டி பல படுகொலை முயற்சிகளுக்கு உட்பட்டார், ஈரானின் ஈரானின் அதியுயர் தலைவர் அவரது மரணத்திற்கு அழைப்பு விடுத்தமை உலகப் புவிசார் அரசியல் சர்ச்சையை எழுப்பியது. இவ்வழைப்பு மத ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை பற்றிய விவாதத்தை உருவாக்கி, புத்தகத்தை உந்துதலாக மேற்கோள் காட்டும் தீவிரவாதிகளால் ஏராளமான கொலைகள் மற்றும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.

1983 இல், இலக்கியத்துக்கான வேத்தியர் கழகத்தின் உறுப்பினராக ருசிடி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 இல் பிரான்சின் "கலை மற்றும் கடிதங்களின் ஆணையின் தளபதி" ஆக நியமிக்கப்பட்டார்.[2] ருசிடி இலக்கியத்திற்கான அவரது சேவைகளுக்காக 2007 இல் சர் பட்டம் பெற்றார்.[3] 2008 ஆம் ஆண்டில், தி டைம்சு இதழ் 1945 முதல் 50 சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களின் பட்டியலில் அவருக்கு பதின்மூன்றாவது இடத்தைக் கொடுத்தது.[4] 2000 ஆம் ஆண்டு முதல், ருசிடி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.[5] முன்னதாக, இவர் எமோரி பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். அவர் கலை மற்றும் கடிதங்களுக்கான அமெரிக்க அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 இல், தி சாத்தானிக் வெர்சசு நூலின் மீதான சர்ச்சையை அடுத்து யோசப் ஆன்டன்: நினைவுக் குறிப்புகள் என்ற அவரது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார்.

2022 ஆகத்து 12 அன்று, நியூயார்க்கின் சட்டக்குவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சல்மான் ருசிடி சொற்பொழிவாற்றத் திட்டமிடப்பட்டிருந்த மேடையில் விரைந்து வந்த ஒரு நபர் ருசிடியைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தினார்.[6][7][8][9]

செய்ப்பூர் இலக்கிய விழா

2012ஆம் ஆண்டில் சனவரி 20 – 24 நாட்களில் செய்ப்பூரில் நடைபெற்ற செய்ப்பூர் இலக்கிய விழாவில் ருசிடி கலந்து கொள்வதாக இருந்தது. இந்திய இசுலாமிய அமைப்புக்கள் பத்வா வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்தியா வர நுழைவிசைவு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் இந்தியா வந்த ருசிடி தமக்கு கொலை மிரட்டல் இருப்பதாக ராசத்தான் காவல்துறை கூறி பயணத்தை கைவிட்டார்.இருப்பினும் இவரது சர்ச்சைக்குரிய சாத்தானிக் வெர்சசு என்ற நூலிலிருந்து சில பகுதிகளை அரி குன்சுரு, அமிதவா குமார், சீத் தாயில், ருசிர் சோசி என்ற எழுத்தாளர்கள் பேசியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து நால்வரும் விழாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.[10][11]

மேற்கோள்கள்

  1. Taseer, Aatish (2 August 2019). "'That the world that you knew, and that in a way made you – that world vanishes. I don't think I'm alone in that,' says Salman Rushdie". Open இம் மூலத்தில் இருந்து 5 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190805051233/https://openthemagazine.com/columns/open-conversation/that-the-world-that-you-knew-and-that-in-a-way-made-you-that-world-vanishes-i-dont-think-im-alone-in-that-says-salman-rushdie/. 
  2. "Rushdie to Receive Top Literary Award பரணிடப்பட்டது 5 மே 2012 at the வந்தவழி இயந்திரம்." Chicago Tribune. 7 January 1999. Retrieved 26 March 2012.
  3. "Birthday Honours List – United Kingdom." The London Gazette 58358(1):B1. 16 June 2007. Retrieved 26 March 2012. பரணிடப்பட்டது 16 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
  4. "The 50 Greatest British Writers Since 1945". பரணிடப்பட்டது 19 பெப்ரவரி 2020 at the வந்தவழி இயந்திரம் The Times, 5 January 2008. Retrieved 1 January 2010. Subscription required.
  5. "Distinguished Professionals in Residence" இம் மூலத்தில் இருந்து 5 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170405170144/https://journalism.nyu.edu/about-us/faculty/distinguished-professionals-in-residence/. 
  6. Gelles, David; Root, Jay; Harris, Elizabeth (12 August 2022). "Live Updates: Salman Rushdie Is Stabbed During Speech in Western New York". https://www.nytimes.com/live/2022/08/12/nyregion/salman-rushdie-stabbed-new-york. 
  7. Goodman, Joshua (August 12, 2022). "Author Salman Rushdie attacked on lecture stage in New York" (in en). Associated Press இம் மூலத்தில் இருந்து August 12, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220812152059/https://apnews.com/article/salman-rushdie-attacked-9eae99aea82cb0d39628851ecd42227a. 
  8. Staniszewski, Eugene J. (August 12, 2022). "State Police are investigating an attack on author Salman Rushdie" (in en) இம் மூலத்தில் இருந்து August 12, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220812214959/https://www.nyspnews.com/state-police-are-investigating-an-attack-on-author-salman-rushdie.htm. 
  9. "Salman Rushdie & Henry Reese" (in en-US) இம் மூலத்தில் இருந்து August 12, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220812203236/https://www.chq.org/event/salman-rushdie-henry-reese/. 
  10. ஜெய்ப்பூர் இலக்கிய விழா-ருஷ்டி புத்தகத்தை வாசித்த 4 எழுத்தாளர்கள் வெளியேற உத்தரவு! ஒன் இந்தியா செய்திவலைத்தளம், பார்வையிடப்பட்ட நாள் சனவரி,23, 2012
  11. Salman Rushdie to address Jaipur Literature Festival via video conference பரணிடப்பட்டது 2012-01-24 at the வந்தவழி இயந்திரம் IBN LIve பார்வையிடப்பட்ட நாள் சனவரி,23, 2012
"https://tamilar.wiki/index.php?title=சல்மான்_ருஷ்டி&oldid=18673" இருந்து மீள்விக்கப்பட்டது