சரசுவதி கந்தசாமி
சரசுவதி கந்தசாமி (ஆங்கிலம்: Saraswathy Kandasami; மலாய்: Saraswathy A/P Kandasami; சீனம்: 萨拉斯瓦迪坎达萨米) (பிறப்பு: 24 செப்டம்பர் 1968) என்பவர் 2022 முதல் மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சில் (Ministry of Entrepreneur Development and Cooperative Malaysia) துணை அமைச்சராகப் பதவி வகிக்கும் மலேசிய அரசியல்வாதி ஆவார்.[2]
மாண்புமிகு சரசுவதி கந்தசாமி YB Senator Saraswathy Kandasami மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் | |
---|---|
மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு வார்ப்புரு:Startdate | |
அரசர் | மாமன்னர் அப்துல்லா |
பிரதமர் | அன்வார் இப்ராகீம் |
மேலவை உறுப்பினர் | |
பதவியில் வார்ப்புரு:Startdate – 09.12.2025 | |
மலேசிய மக்கள் நீதிக் கட்சியின் துணைத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு வார்ப்புரு:Startdate | |
குடியரசுத் தலைவர் | அன்வர் இப்ராகீம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 24 செப்டம்பர் 1968 ஜார்ஜ் டவுன்; பினாங்கு |
கல்வி | பன்னாட்டு வர்த்தகச் சட்டம் இலண்டன் பல்கலைக்கழகம், இங்கிலாந்து LLB (Hons.), LLM (London) |
பணி |
மலேசிய வரலாற்றில் ஓர் இந்தியப் பெண்மணி, அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும், மலேசிய அரசாங்கத்தைத் தற்போது நிர்வகிக்கும் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியில்; மலேசிய மக்கள் நீதிக் கட்சியின் தேசிய உதவித் தலைவர் பொறுப்பிலும் இவர் தான் முதல் இந்தியப் பெண்மணி. அந்த வகையில் மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கிறார்.
2022 திசம்பர் 10-ஆம் தேதி, மலேசிய மாமன்னர் அப்துல்லா அவர்களால், மலேசிய மேலவை உறுப்பினராக (Dewan Negara Senator) நியமிக்கப்பட்டார். அதே நாளில் அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் (Anwar Ibrahim Cabinet) மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சில் துணை அமைச்சராகவும் பதவியில் அமர்த்தப் பட்டார்.[3]
பொது
மலேசிய மக்கள் நீதிக் கட்சியைச் சேர்ந்த சரசுவதி கந்தசாமி; மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீமின் பாக்காத்தான் அரப்பான் (Pakatan Harapan) கூட்டணியில் உதவித் தலைவர் பதவி வகிக்கிறார். அன்வர் இப்ராகீம் அமைச்சரவையில் 27 துணை அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர். அத்துடன் மலேசிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் இந்தியப் பெண் என்றும் அறியப்படுகிறது.[4]
2020-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மலேசிய மனிதவள அமைச்சர் மு. சரவணன் அவர்களை எதிர்த்து சரசுவதி கந்தசாமி போட்டியிட்டார்.
தாப்பா நாடாளுமன்றத் தேர்தல் 2022
அந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரசுவதி கந்தசாமிக்கு 13,334 வாக்குகளும்; தாப்பா நாடாளுமன்றத் தொகுதியை தக்க வைத்துக் கொண்ட மு. சரவணனுக்கு 18,398 வாக்குகளும் கிடைத்தன.[5]
5,064 வாக்குகள் வேறுபாட்டில் சரசுவதி கந்தசாமி தோல்வி கண்டபோதும், மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[6]
தேர்தல் முடிவுகள் (2022)
ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | வாக்களிப்பு | பெரும் பான்மை |
Turnout | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2022 | P072 தாப்பா | சரசுவதி கந்தசாமி (பி.கே.ஆர்) |
13,334 | 29.98% | மு. சரவணன் (மஇகா) | 18,398 | 41.36% | 44,481 | 5,064 | 71.81% | ||
முகம்மது யாட்சன் முகமது (பெர்சத்து) | 12,115 | 27.24% | ||||||||||
மியோர் நோர் அயிதிர் சுகைமி (பெஜுவாங்) | 335 | 0.75% | ||||||||||
முகமது அக்பர் சரிப் அலி யாசின் (வாரிசான்) | 200 | 0.45% | ||||||||||
எம்.கதிரவன் (சுயேச்சை) | 99 | 0.22% |
வரலாறு
பினாங்கு மாநிலத்தின் தலைநகரமான ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்த சரசுவதி கந்தசாமி பினாங்கு லைட் சாலை பள்ளியில் (Convent Light Street, Penang) தன் தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் பயின்றார்.
பின்னர் இங்கிலாந்து இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பன்னாட்டு வர்த்தகச் சட்டத் துறையில் முதுகலை பட்டம் (Master's Degree in law at Universiy Of London) பெற்றார். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் இவர் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.
பொறுப்புகள்
- வழக்கறிஞர்
- மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் (2022)
- சட்ட ஆலோசகர் தமிழ் மலர் நாளிதழ்
- மலேசிய மனிதவள அமைச்சு; திறன் மேம்பாட்டு நிதிக் கழகத்தின் (Skills Development Fund Corporation - PTPK) முன்னாள் தலைவர்
- பொதுச் செயலாளர், டாக்டர் அம்பேத்கார் நல வாரியம் (Dr. Ambedkar Welfare Board)
மேற்கோள்கள்
- ↑ "YB Senator Puan Saraswathy Kandasami appointed as Deputy Minister of Entrepreneur Development and Cooperatives on 10 December 2022". https://www.kuskop.gov.my/index.php?r=site%2Findex&id=11&page_id=22&articleid=8669&language=en. பார்த்த நாள்: 28 April 2023.
- ↑ "Saraswathy A/P Kandasami, HON. Senator Puan". Senate (Parliament of Malaysia). 2023. https://www.parlimen.gov.my/profile-ahli.html?&uweb=dn&id=4038&lang=en.
- ↑ "List Of Deputy Ministers In Anwar's Cabinet And Their Party" (in English). Business Today (Malaysia). 10 December 2022. https://www.businesstoday.com.my/2022/12/10/list-of-deputy-ministers-in-anwars-cabinet-and-their-party/.
- ↑ "The Official Portal of the Malaysian Parliament - Profile Ahli Dewan". https://www.parlimen.gov.my/profile-ahli.html?uweb=dn&id=4038. பார்த்த நாள்: 28 April 2023.
- ↑ "Saraswathy Kandasami lost to BN candidate, Saravanan AL Murugan who had a majority of 5,064; but Saraswathy Kandasami was appointed as the Deputy Minister of Entrepreneurship and Cooperative Development.". https://pru.sinarharian.com.my/calon/8062/saraswathy-kandasami. பார்த்த நாள்: 28 April 2023.
- ↑ "Naib Presiden PKR K Saraswathy dan bekas Ketua Wanita PKR Fuziah Salleh mengangkat sumpah jawatan sebagai Ahli Dewan Negara bagi tempoh sepenggal berkuat kuasa hari ini.". https://www.bharian.com.my/berita/nasional/2022/12/1037651/saraswathy-fuziah-angkat-sumpah-senator?utm_source=bh&utm_medium=disyorkananda. பார்த்த நாள்: 28 April 2023.