சப்தகாதை வியாக்கியானம்

சப்தகாதை வியாக்கியானம் என்பது சப்தகாதை என்னும் நூலுக்கு எழுதப்பட்ட விரிவுரை. எழுதியவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிள்ளை லோகஞ்சீயர்.

இந்த நூலில் கூறப்பட்ட செய்திகள்

  • இராமானுசர் நூற்றிருபது ஆண்டு குறைவு நிறைவுகள் இன்றிக்கே [1] இருந்தார்.
  • பிள்ளை லோகாசிரியரின் திருவுருவ வருணனை – தேமருவும் செங்கமலத் திருத்தாள்களும், திகழும் வான்பட்டடை பதிந்த திருமருங்கும், முப்புரி நூலின் தாம மணிவடம் அமர்ந்த திருமார்பும், முன்னவர் தந்தருள் மொழிகள் நிறைந்த திருமுறுவலும், கருணை மொழிந்திடும் இணைக் கண்களும், கன நல்ல சிகைமுடியும், திங்கள் போலும் திருநுதலும், ... [2] என்று வளர்கிறது.
  • விரிவுரையில் பதவுரையும் உள்ளது.
  • விரிவுரையின் தொடக்கத்தில் தனியன் பாடல் ஒன்றும் உள்ளது. [3]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 16ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. இது அவர் நடை
  2. இதனை அவரது நடைக்கு எடுத்துக்காட்டாகவும் கொள்ளலாம்
  3. வாழி நலந்திகழும் நாரண தாதனருள்
    வாழி அவனமுத வாய்மொழிகள் – வாழியே
    ஏறு திருவுடையான் எந்தை உவகாரியன் சொல்
    தேறு திருவுறையான் சீர்.
"https://tamilar.wiki/index.php?title=சப்தகாதை_வியாக்கியானம்&oldid=17219" இருந்து மீள்விக்கப்பட்டது