சபீர் கல்லரக்கல்

சபீர் கல்லரக்கல் (Shabeer Kallarakkal) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படமான சார்பட்டா பரம்பரை (2021) படத்தில் "டான்சிங் ரோஸ்" என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.[1]

சபீர் கல்லரக்கல்
பிறப்புதமிழ்நாடு, சென்னை
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை

தொழில்

ஆய்த எழுத்து (2004) படத்தில் சபீர் அங்கீகரிக்கப்படாத பாத்திரத்தில் தோன்றினார்.[2] பின்னர் இவர் நாடகக் கலைஞரானாக இருந்துவந்தார். லட்சுமி ராமகிருஷ்ணனின் நெருங்கி வா முத்தமிடாதே (2014) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சபீர் முழுநீள திரைப்படத்தில் அறிமுகமானார். நடிகைகள் பியா பஜ்பை, சுருதி ஹரிஹரன் ஆகியோருடன் இணைந்து, சபீர் பெட்ரோல் நெருக்கடியில் சிக்கிய ஒரு சரக்குந்து ஒட்டுநர் பாத்திரத்தை சித்தரித்தார். இவரது முதல் படத்தில் இவரது நடிப்பின் பின்னணியில், இவர் 54321 (2016) இல் நடித்தார். சபீர் இந்த படத்தில் முக்கிய எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். இவரது நாடக அனுபவம், நடிக்கும் திறன் காரணமாக தான் இவரை தேர்ந்தெடுத்ததாக இயக்குநர் கூறினார்.[3]

2018 இல் அடங்க மறு (2018) படத்தில் சபீர் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். பின்னர் இவர் பேட்ட (2019) படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க கார்த்திக் சுப்பராஜிடம் ஒப்பந்தமானார்.[4]

திரைப்படவியல்

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2004 ஆய்த எழுத்து அங்கீகரிக்கப்படாத பாத்திரம்
2014 நெருங்கி வா முத்தமிடாதே சந்துரு சுப்ரமணியம்
2016 54321 விக்ரம்
2018 அடங்க மறு புவனேஷ்
2019 பேட்ட அர்ஜித்
2021 டெடி ஹரிஷ்
சார்பட்டா பரம்பரை டேன்சிங் ரோஜா
ஆவணப்படங்கள்
  • Where The Trees Sing (2017)

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சபீர்_கல்லரக்கல்&oldid=21733" இருந்து மீள்விக்கப்பட்டது