சந்திரபோஸ் சுதாகரன்
சந்திரபோஸ் சுதாகரன் (இறப்பு: ஏப்ரல் 16, 2007) ஈழத்துத் தமிழ் ஊடகவியலாளரும் நிலம் என்ற தமிழ் இதழின் ஆசிரியரும் ஆவார். பல இலங்கைத் தமிழ் ஊடகங்களில் எழுதி வந்தவர். வீரகேசரி பத்திரிகையில் முன்னர் பணியாற்றியவர். இவர் வவுனியாவில் திருநாவற்குளம் என்ற இடத்தில் வைத்து 2007, ஏப்ரல் 16 இல் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சந்திரபோஸ் சுதாகரன் | ||
---|---|---|
இறப்பு | ஏப்ரல் 16, 2007 வவுனியா, இலங்கை | |
தொழில் | நிலம் இதழின் ஆசிரியர் | |
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்) | சார்பில்லா பத்திரிகையாளர் |
பின்புலம்
ஈழப்போரின் போது இலங்கையில் பல சார்பில்லா ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும் போன நிகழ்வுகளில் சுதாகரனின் கொலையும் ஒன்றாகும்[1]. குறிப்பாகத் தமிழ் ஊடகங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஒரு பகுதியாக இவரது கொலை கருதப்படுகிறது[2].
நிகழ்வு
இவரது வீட்டுக்குச் சென்ற ஆயுதம் தாங்கிய ஆறு பேர் சுதாகரனை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். கொலையாளிகள் தமிழிலும் சிங்களத்திலும் கதைத்ததாக அவரது எட்டு வயது மகன் பின்னர் தெரிவித்தார்[3]. இவரது வீடு அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தது.
விசாரணை
இவரது கொலை தொடர்பாகப் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பன்னாட்டு செய்தியாளர்கள் நிறுவனம் அரசாங்கத்தைக் கேட்டிருந்தது[4]. பத்திரிகையாளர்களை படுகொலை செய்வது பத்திரிகை தர்மத்தின் படுகொலைக்கு ஒப்பானது என வவுனியா மாவட்ட நீதிபதி ஆ.இளஞ்செழியன் சுதாகரனின் மரண விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்[5]. ஆனாலும் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927010054/http://us.oneworld.net/external/?url=http:%2F%2Fwww.rsf.org%2Farticle.php3%3Fid_article=21932.
- ↑ Sri Lanka Journalist’s abduction highlights intimidation of media
- ↑ "Reporters sans frontières - Sri Lanka" இம் மூலத்தில் இருந்து 2007-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070501053331/http://www.rsf.org/article.php3?id_article=21864.
- ↑ "Joint Mission to Sri Lanka - International Advocacy and Fact Finding". IPI. 2007-06-25 இம் மூலத்தில் இருந்து 2007-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070926235431/http://www.freemedia.at/cms/ipi/missions_detail.html?ctxid=CH0065&docid=CMS1160987735504&category=all. பார்த்த நாள்: 2007-06-25.
- ↑ "ஊடகத்துறையினருக்கு உலைக்களமாகும் இலங்கை" இம் மூலத்தில் இருந்து 2010-06-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100612195020/http://globaltamilnews.net/tamil_news1.php?nid=4427&cat=5.
வெளி இணைப்புகள்
- Sri Lanka mission report பரணிடப்பட்டது 2007-09-26 at the வந்தவழி இயந்திரம்
- Nine recommendations for improving media freedom in Sri Lanka – RSF
- Media in Sri Lanka பரணிடப்பட்டது 2008-05-01 at the வந்தவழி இயந்திரம்
- Free Speech in Sri Lanka பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்