சத்தி கவசம்

சத்தி கவசம் என்னும் தமிழ்நூல் 12 பாடல்கள் கொண்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய காசி காண்டம் என்னும் நூலின் 72ஆம் அத்தியாயம் வச்சிர பஞ்சர கவசம். இதனைச் சத்தி கவசம் என்றும் கூறுவர். நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.

துர்க்கன் என்னும் அரக்கனை அம்மை அழித்து நின்ற நிலையில் துர்க்கை எனப்பட்டாள். துர்க்கையை வணங்கிய முகுந்தன் முதலான தேவர்கள் இந்தக் கவசத்தைச் சொன்னார்களாம்.

துர்க்கையின் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் இன்னின்ன அம்சம் என்று கூறி அது தன்னைக் காக்கவேண்டும் என்று கூறுவது சத்திகவசம்.

எடுத்துக்காட்டுப் பாடல்

அங்கையிற் கரகம் தாங்கும் பிரமணி அருளி னோடும் துங்க என் சென்னி காக்க, வயிணவி துகள் இல் ஆகம் எங்கணும் காக்க; செய்ய ஏந்தெழில் உருத்தி ராணி தங்கும் எண் திசையும் அன்பு தழைத்திட இனிது காக்க. (முதல் பாடல்) 1865 முதல் காசி காண்டம் நூல் பலரால் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. சத்தி கவசம் படித்தால் நோய் அண்டாது, திருமணம் ஆகும், வெற்றி கிட்டும் என்றெல்லாம் நம்பி இந்தக் கவசத்தை மனப்பாடம் செய்து பாடுவர்.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
"https://tamilar.wiki/index.php?title=சத்தி_கவசம்&oldid=17213" இருந்து மீள்விக்கப்பட்டது