சதாசிவ பிரமேந்திரர்

சதாசிவ பிரம்மேந்திரர் (Sadasiva Brahmendra) தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தியும், கருநாடக இசை அறிஞரும் ஆவார். [2]போதேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர்.

சதாசிவ பிரமேந்திரர்
Sadasiva Brahmendra சதாசிவ பிரமேந்திரர்.jpg
சித்தர் சதாசிவ பிரம்மேந்திரரின் உருவப்படம்
பிறப்பு17-18வது நூற்றாண்டு
திருவிசைநல்லூர், கும்பகோணம்[1]

வாழ்க்கை

சோமசுந்தர அவதானி - பார்வதி இணையருக்கு சிவராமகிருஷ்ணன் எனும் இயற்பெயருடன் கும்பகோணத்தில் பிறந்தவர். போதேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியவர்களுடன் ஒரே குருகுலத்தில் வேதம் பயின்றவர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானம் பெற சந்நியாசம் மேற்கொண்டு உலகைச் சுற்றிவரலானார். [3] பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு நூல் மூலம், சதாசிவ பிரமேந்திரரின் யோக சக்திகள் அறிய முடிகிறது. அட்டாங்க யோக சித்திகளை அடைந்தவர்.[4][5][6][7]

கோயில் பணியில்

புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு தட்சிணாமூர்த்தி மந்திரத்தை, மண்ணில் எழுதிக் கொடுத்தது, இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் உள்ளது.[8][9]

தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைக்க காரணமானவர். தேவதானப்பட்டியில் காமாட்சி அம்மன் கோயிலை நிறுவியவர். கரூரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலை நிர்மாணிப்பதில் பங்கு கொண்டவர்.[10] தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச கோயிலில் அனுமார் விக்கிரகத்தை நிர்மாணித்தவர்.[11]

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலின் ராகு தலத்தில் கணபதி இயந்திர மந்திரத் தகட்டை எழுதிப் பதித்தவர்.

சமாதிகள்

 
நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி

சதாசிவ பிரமேந்திரரின் சமாதி மூன்று இடங்களில் உள்ளது.

படைப்புகள்

நூல்கள்

  1. ஆத்ம வித்தியா விலாசம் (அத்வைத விளக்க நூல்)
  2. பிரம்ம சூத்திர விளக்கம்
  3. யோக சுதாகர (பதஞ்சலி யோக சூத்திர விளக்க நூல்)
  4. சித்தாந்த கல்பவல்லி
  5. அத்வைதரசமஞ்சரி
  6. ஆத்மானுசந்தானம்
  7. சிவமானசபூஜை
  8. தட்சினாமூர்த்தி தியானம்
  9. நவமணிமாலா
  10. நவ்வர்ண இரத்தினமாலா
  11. சுவானுபூதி பிரகாசிதகம்
  12. மனோனியமானம்
  13. பரமஹம்ச ஆச்சாரியார்
  14. சிவயோக தீபிகா
  15. உபநிடத வியாக்கியானம்
  16. கேசரவல்லி
  17. சூத்திர சம்கிதா
  18. பாகவத சாரம்
  19. ஆத்ம-அனாத்ம விவேக பிரகாசிகா

பாடல்கள்

பாமர மக்கள் அத்வைத அறிவை பெறும் பொருட்டு கருநாடக இசையில் எளிய பாடல்களில் விளக்கியுள்ளார். அவைகளில் பிரபலமானவைகள்:

  1. ஆனந்த பூரண போதகம் சச்சிதானந்தா - இராகம் சங்கராபரணம்
  2. ஆனந்த பூர்ணா போதக சதகம் - மத்தியமாவதி
  3. பஜரே கோபாலம் - ஹிந்தோளம்
  4. பஜரே ரகுவீரம் -
  5. பஜரே யதுநாதம் - பீலு
  6. பிரம்மவைபவம் - நடனமாக்கிரியா
  7. சேட்டா ஸ்ரீராமம்
  8. சிந்தா நாஸ்தி கிலா
  9. காயதி வனமாலி
  10. பிபரே ராம ரசம்
  11. பூர்ண போதகம்
  12. ஸ்மாரவரம்

திரைப்படத்தில்

மகாசக்தி மாரியம்மன் என்ற திரைப்படத்தில், சதாசிவ பிரமேந்திரின் அஷ்டாங்க யோக சித்திகள் காட்டப்படுகிறது.[சான்று தேவை]

கலைகளில்

தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சதாசிவ பிரமேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, தோழன் எனும் புதினத்தை எழுதியுள்ளார்.

படக்காட்சியகம்

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Sadasiva Brahmendra (18th Century)". http://carnatica.net/composer/sadasivabrahmendra.htm. பார்த்த நாள்: 2 December 2010. 
  2. "Commentaries of Sadasiva Brahmendra on Brahmasutra & Yogasutra". 2010-07-29. http://hinduebooks.blogspot.com/2010/07/commentaries-of-sadasiva-brahmendra-on.html. பார்த்த நாள்: 2 December 2010. 
  3. "Sri Sadashiva Brahmendra – the Avadhuta". http://saintsandgod.wordpress.com/2010/05/27/sri-sadashiva-brahmendra-the-avadhuta-%C2%A0/. பார்த்த நாள்: 2 December 2010. 
  4. "Sri Sadasiva Brahmendral - Part II ...Contd". 2007-07-03 இம் மூலத்தில் இருந்து 15 மார்ச் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090315044923/http://living.oneindia.in/yoga-spirituality/faith-mysticism/sadasiva-brahmendra-partii2.html. பார்த்த நாள்: 2 December 2010. 
  5. "Autobiography of a Yogi by Parahamsa Yogananda" இம் மூலத்தில் இருந்து 23 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120623224547/http://www.crystalclarity.com/yogananda/chap41.php. பார்த்த நாள்: 20 June 2011. 
  6. Devi R, Priya (2007-07-03). "Sri Sadasiva Brahmendral - Part II" இம் மூலத்தில் இருந்து 9 மார்ச் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090309191828/http://living.oneindia.in/yoga-spirituality/faith-mysticism/sadasiva-brahmendra-partii.html. பார்த்த நாள்: 2 December 2010. 
  7. "Sadasiva Brahmendra: Perhaps two of the greatest mystics of India belong to the Tamil region". http://www.krishnamurthys.com/profvk/gohitvip/sadasiva.html. பார்த்த நாள்: 27 July 2012. 
  8. http://ananthablahblah.wordpress.com/tag/pudukottai/
  9. http://newindianexpress.com/magazine/article1306352.ece
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150725110132/http://www.columbuslost.com/2013/09/sri-sadasiva-brahmendra-great-indian.html. 
  11. http://vayusutha.in/vs4/temple30.html
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-08-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130807094513/http://www.sringeri.net/2012/07/17/stotra/guru/sri-sadashivendra-stava.htm. 
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-07-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140720035131/http://www.sringeri.net/2012/07/16/stotra/guru/sri-sadashivendra-pancharatna-stotram.htm. 
  14. http://columbuscarnatic.org/2011/10/sadasiva-brahmendra/[தொடர்பிழந்த இணைப்பு]

மேலும் படிக்க


"https://tamilar.wiki/index.php?title=சதாசிவ_பிரமேந்திரர்&oldid=7334" இருந்து மீள்விக்கப்பட்டது