சடானனம்
சடானனம் (சடை ஆனனம்) என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]
சடானனம் என்பது சடைமுடியில் திருகிச் செருகும் சடை-வில்லை என்னும் அணிகலன். நான்மணி மாலை என்னும் நூல் நான்கு வகையான பாடல்கள் மாறி மாறி அடுக்கி வருமாறு ஒரு பொருள் மேல் பாடப்பட்டிருக்கும் ஒரு வகைச் சிற்றிலக்கியம். அது போலச் சடானனம் என்னும் நூலில் கலிப்பாவும், தாழிசையும் விரவி வருமாறு பாடல்கள் ஒரு பொருள் மேல் தொடுக்கப்பட்டிருக்கும். இந்தச் சடானனம் என்னும் சிற்றிலக்கியம் பாடல் அமைதியால் பெயர் பெற்ற நூல்.
கலிப்பாவும் தாழிசையும் நான்மணி மேல் காட்டல்
நலத்துறு சடானன நற்பா [2]
மேற்கோள்
- ↑ பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 486
- ↑ நூற்பா 14