சங்குவேலி
சங்குவேலி (sanguvelly) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் (வலிகாமம் தெற்கு) உள்ள ஒரு ஊர். கிழக்கே உடுவில், வடக்கே கந்தரோடை, தெற்கே மானிப்பாய், மேற்கே சண்டிலிப்பாய் ஆகிய ஊர்கள் சங்குவேலியின் எல்லைகளாக அமைந்துள்ளன. இது நாலா புறமும் நெல் வயல்களும் தோட்டங்களும் சூழ்ந்த கிராமமாகும். விவசாய கிராமமான சங்குவேலியில் வெள்ளரி , கத்தரி செய்கையே பிரசித்தமானது.
சங்குவேலி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°44′9.98″N 80°0′10.4″E / 9.7361056°N 80.002889°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வலிகாமம் தெற்கு |
மக்கள்
இங்குள்ள மக்கள் தமிழர்களாவர். பேசும் மொழி தமிழ் மொழி. இங்கு இந்துக்களும், கிறித்தவர்களும் ஒருங்கே வாழ்ந்து வருகின்றார்கள்.
சங்குவேலி கிராம சேவையாளர் பிரிவுகள்
- யா/187 சங்குவேலி
அமைந்துள்ள பாடசாலைகள்
- சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
அமைந்துள்ள இந்து ஆலயங்கள்
- சங்குவேலி வெட்டுக்கட்டைப் பிள்ளையார் ஆலயம்
- சங்குவேலி சிவஞானப் பிள்ளையார் ஆலயம்
- கலட்டி ஞானவைரவர் தேவஸ்தானம்
- ஞானவைரவர் காளிஅம்மாள் தேவஸ்தானம்
- சங்குவேலி தெற்கு முத்துமாரி அம்பாள் ஆலயம்
இங்கு பிறந்தவர்கள்
- முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை, கல்வியாளர்
இவற்றையும் பார்க்கவும்
Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function