சங்கற்ப நிராகரண உரை

சங்கற்ப நிராகரண உரை என்பது 16ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் தோன்றிய உரை நூல். சங்கற்ப நிராகரணம் என்னும் நூல் சைவ சித்தாந்த உட்பிரிவுகளை மறுக்கும் நூல். இதில் உள்ள 474 குறள் வெண்பாக்களுக்கு எழுதப்பட்ட உரையினைக் கொண்டது இந்த நூல். ஞானப்பிரகாச தேசிகன் என்பவர் இந்த உரைநூலின் ஆசிரியர். இவர் காவிரி நாட்டினர்.

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, காரைக்கால் அம்மையார் பாடல்கள், நக்கீரர் அந்தாதி ஆகிய நூல்களுள்ள பாடல்களை இவர் மேற்கோள் பாடல்களாகக் காட்டியுள்ளார்.

எடுத்துக்காட்டு

ஒரு புடவையை ஒருத்தன் ஓரோர் இழையாக நாளிலே பிடுங்கிப் பிடுங்கிப் போட்ட பின்பு அந்தப் புடவை இல்லையாய்ப் போன தன்மை போல பிரபஞ்சமாகிற பொய்யையும் பிருதிவி முதலாகக் கொண்டு இது நானல்ல, இது நானல்ல என்று நேகி பண்ணு.

இந்த நூல் வெளிவந்த பதிப்புகள் மூன்று. கொன்றைமாநகரம் சண்முகசுந்தர முதலியார், காஞ்சி நாகலிங்க முனிவர் ஆகியோர் பதிப்புகள் முதலில் வெளிவந்தன. பின்னர் அனவரத வினாயகம் பிள்ளை பார்வையில் சைவ சித்தாந்த சமாஜம் வெளியிட்ட 1934, 1940 பதிப்புகள் சிறப்பு மிக்கவை.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
"https://tamilar.wiki/index.php?title=சங்கற்ப_நிராகரண_உரை&oldid=15683" இருந்து மீள்விக்கப்பட்டது