க. லோகநாதன்

க. லோகநாதன் (பிறப்பு: பிப்ரவரி 8 1934) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், க. ரா. அறிவழகன் எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்டவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார். ==எழுத்துத் துறை ஈடுபாடு 1952 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

க. லோகநாதன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
க. லோகநாதன்
பிறந்ததிகதி பிப்ரவரி 8 1934
அறியப்படுவது எழுத்தாளர்

நூல்

  • "கவியரங்கக் கவிதைகள்" (1997)

பரிசுகளும் விருதுகளும்

  • "தமிழ் மணி" "புலவர்" பட்டங்கள்
  • தொக்கொ குரு (1989)
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பதக்கமும் பணமுடிப்பும் (1985)
  • தங்கப் பதக்கம் (1991)
  • அரசாங்கத்தின் PJK விருது.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=க._லோகநாதன்&oldid=6173" இருந்து மீள்விக்கப்பட்டது