க. து. மு. இக்பால்
க. து. மு. இக்பால் (பி. 1940) சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் ஆவார். இவருக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் மிக உயரிய கலாசார விருது வழங்கப்பட்டது.[1] சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் கலாரத்னா விருது, தென்கிழக்காசிய இலக்கிய விருது, தமிழவேள் விருது, மோண்ட் பிளாங் இலக்கிய விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
க. து. மு. இக்பால் |
---|---|
பிறந்ததிகதி | 1941 |
பிறந்தஇடம் | கடையநல்லூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் |
தேசியம் | சிங்கப்பூரர் |
அறியப்படுவது | கவிஞர் |
பெற்றோர் | துவான் ரகுமத்துல்லா, பீர் பாத்திமா |
பிள்ளைகள் | 5 ஆண்கள் |
வாழ்க்கைக் குறிப்பு
இக்பால் தமிழ்நாட்டில் கடையநல்லூரில் 1940ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் துவான் ரகுமத்துல்லா, பீர் பாத்திமா ஆவர். இக்பால் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1956 ஆம் ஆண்டில் கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை 7 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர் வானொலியில் ‘பாடிப் பழகுவோம்’ என்ற நிகழ்ச்சிக்கு 1970களிலும் 80களிலும் கிட்டத்தட்ட 200 பாடல்கள் வரை எழுதியுள்ளார்.[1]
வெளியிட்ட கவிதை நூல்கள்
- இதய மலர்கள் – 1975
- அன்னை (கவிதை நூல்) – 1984
- முகவரிகள் – 1989
- வைரக் கற்கள் – 1995
- கனவுகள் வேண்டும் – 2000
- காகித வாசம் – 2003
- வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள் – 2005
கவிஞர் இக்பால் உலக அளவிலே பல பெருமைகளும் விருதுகளும் பெற்றுள்ளார்.
கவிஞர் இக்பால் பெற்ற விருதுகளும் பெருமைகளும்
- சிங்கப்பூர் கலாசார விருது (2014)
- சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலைகள் மையமும் மோங் பிளாங்க் [Mont Blanc] பேனா நிறுவனமும் இணைந்து வழங்கிய இலக்கிய விருது (1996)
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் "தமிழவேள் இலக்கிய விருது (1999)
- தாய்லாந்து அரசு வழங்கிய தென்கிழக்காசிய இலக்கிய விருது (2001)
- சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் "கலா ரத்னா" விருது (2004)
- முகவரிகள் நூலுக்குச் சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டுக் கழகப் பாராட்டு விருது (1990)
- சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்ற ஆதரவில் தண்ணீர் எனும் கவிதை எம்.ஆர்.டி.ரயில் வண்டிகளில் இடம்பெற்றது (1995).
- ஜெர்மனியின் ஹனோவர் நகரில் நடைபெற்ற எக்ஸ்போ-2000 எனும் மாபெரும் கண்காட்சியில் கோய்த்தே இன்ஸ்ட்டியூட (Goethe Institute) ஆதரவில் "தண்ணீர்" கவிதை இடம்பெற்றது.
- தென்கொரியாவின் பூசான் (Busan) நகரில் நவம்பர் 2005 இல் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளியல் உச்சநிலை மாநாட்டில் "மாலைப் பண்" என்னும் கவிதை இடம்பெற்றது. "Representative Poetry of participating nations in 2005 APEC" எனும் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது.
- தேசியக் கலைகள் மன்றம் 2000 ஆம் ஆண்டில் வெளியிட்ட சந்தங்கள்:சிங்கப்பூர்க் கவிதைகள் ஆயிரத்தாண்டுத் தொகுப்பு (Rhythms:A Singaporean Millennial Anthology of Poetry) நூல் ஆசிரியர் குழு உறுப்பினர்
- தேசியக் கலைகள் மன்றத்தின் இலக்கியக் குழு உறுப்பினர் (Arts Resource Panel , Literature 2004- 2006)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "கவிஞர் இக்பாலுக்கு உயரிய கலாசார விருது". தமிழ்முரசு. 16 அக்டோபர் 2014. http://www.tamilmurasu.com.sg/story/42718. பார்த்த நாள்: 25 அக்டோபர் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
- சிங்கப்பூரின் அதியுயர் இலக்கிய விருது பெற்ற தமிழர் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம், கவிஞர் இக்பாலுடன் நேர்காணல், குலசேகரம் சஞ்சயன், எஸ்பிஎஸ், அக்டோபர் 24, 2014