க.ப. அறவாணன்
க. ப. அறவாணன் (ஆகத்து 9, 1941 - திசம்பர் 23, 2018) தமிழக எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு, சென்னை அய்யாவு நாயுடு காலனி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி (தஞ்சாவூர் மாவட்டம்)[1] ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாளரும் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
க. ப. அறவாணன் |
---|---|
பிறப்புபெயர் | அருணாசலம் |
பிறந்ததிகதி | ஆகத்து 9, 1941 |
பிறந்தஇடம் | தஞ்சாவூர் மாவட்டம் |
இறப்பு | திசம்பர் 23, 2018 | (அகவை 77)
பணி | தமிழ்ப்பேராசிரியர் |
தேசியம் | இந்தியா |
கல்வி | எம்.ஏ., எம்.லிட்., பி.எச்டி. |
அறியப்படுவது | எழுத்தாளர் |
துணைவர் | தாயம்மாள் அறவாணன் |
பிள்ளைகள் | அருள்செங்கோர், |
கல்வி
சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். "நன்னூலும் அதன் உரைகளும்" என்னும் ஆய்வுக்கட்டுரைக்காக எம்.லிட். பட்டம் பெற்றவர்.
பணி
- தமிழ் விரிவுரையாளர், தூய சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை.
- முதல்வர், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம்.
- தமிழ்த் துணைப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
- ஆய்வுப்பேராசிரியர், செனகல் பல்கலைக்கழகம், செனகல்.
- தமிழ்ப்பேராசிரியர் & துறைத்தலைவர், லயோலா கல்லூரி, சென்னை.
- தமிழ்ப்பேராசிரியர் & தமிழியற்புலத்தலைவர், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், காலாப்பட்டு, புதுச்சேரி.
- துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிசேகபட்டி, திருநெல்வேலி.
எழுதிய நூல்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;
- அவன் அவள் அது (சிறுகதைத்தொகுதி)
- அவளொரு பண்புத்தொகை (நெடுங்கதை)
- அற்றையநாள் காதலும் வீரமும் (முனைவர் பட்ட ஆய்வேடு); தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29.
- கவிதை கிழக்கும் மேற்கும்; 1975, தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29. [2]
- காலப்போக்கும் கல்லூரிப்போக்கும்
- கல்வித்துறை உருப்பட
- சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை[3]
- தொல்காப்பிய ஒப்பியல்; 1975; சைன இளைஞர் மன்றம், 1-ஏ போக் சாலை, சென்னை 17. [2]
- தொல்காப்பியக் களஞ்சியம்; 1975; பாரிநிலையம், சென்னை. [2]
- தமிழர் தடங்கல்; 1992 மே; தமிழ்க்கோட்டம், 91, இரண்டாவது தெரு, மோகன் நகர், புதுச்சேரி 605 005; பக்.172
- தமிழர்தம் தலைமை வழிபாடு
- தமிழர்தம் மறுபக்கம்
- தமிழரின் தாயகம்; உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
- தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்
- தமிழ்ச்சமுதாய் நோய்கள்
- தமிழ்ச்சமுதாய வரலாறு- முதற்பகுதி
- தமிழ் மக்கள் வரலாறு[4]
- திராவிடர்
- படைப்பாளி + சமுதாயம் = இலக்கியம்; 1995; கிரணம் கன்ப்யூட்டர் ஒளி அச்சகம், புதுச்சேரி.
- பயண அனுபவங்களின் பாதை வெளிச்சங்கள்
- பாதையாகு பாறைகள்: வாழ்க்கை முன்னேற்ற வழிமுறைகள்; 1988 திசம்பர்; தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29.
- புரட்சிப்பொறிகள் (கவிதை)
- Collected Papers on Tamilogy
பதிப்பித்த நூல்கள்
க. ப. அறவாணன் பின்வரும் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்:
- அவிநயம்:மூலமும் உரையும்; 1975; சைன இளைஞர் மன்றம், 1-ஏ போக் சாலை, சென்னை 17. [2]
இதழ் ஆசிரியர்
இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள்
- அறிவியல் தமிழியம்
- தேடல்
- முடியும்
- கொங்கு
பதிப்பாசிரியர்
இ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.
உரை
- அருங்கலச்செப்பு; சைன இளைஞர் மன்றம், 1-ஏ, போக் சாலை, சென்னை 600 017.
அறவாணர் விருது
இவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
விருதுகளும் கௌரவங்களும்
- தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
- 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
மேற்கோள்கள்
- ↑ "முனைவர் க ப அறவாணன்-நேர்காணல்". archive.is. 2 February 2014 இம் மூலத்தில் இருந்து 2 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140202045307/http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=18155.
- ↑ 2.0 2.1 2.2 2.3 தில்லைநாயகம், வே (பதி); நூல்கள் அறிமுகவிழா; தமிழ்நாட்டரசு பொதுநூலகத்துறை, 1976; பக். 16
- ↑ http://www.idref.fr/060975016
- ↑ அறவாணன், க ப; Aṟavāṇaṉ, Ka Pa (23 December 2018). "தமிழ் மக்கள் வரலாறு: நாயக்கர் காலம்". தமிழ்க் கோட்டம், 2013 Ceṉṉai : Tamil̲k Kōṭṭam. http://www.sudoc.abes.fr/xslt/DB=2.1//SRCH?IKT=12&TRM=169646750&COOKIE=U10178,Klecteurweb,D2.1,Ed97582a7-803,I250,B341720009+,SY,A%5C9008+1,,J,H2-26,,29,,34,,39,,44,,49-50,,53-78,,80-87,NLECTEUR+PSI,R94.59.234.129,FN&COOKIE=U10178,Klecteurweb,I250,B341720009+,SY,NLECTEUR+WEBOPC,D2.1,Eaa7fbc20-4,A,H,R208.80.154.49,FY.