கோ. சுப்பிரமணியம்
கோ. சுப்பிரமணியம் (பிறப்பு சூன் 19 1937) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஜி. எஸ். மணியம் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் மலேசியத் திராவிடர் கழகம், தொழிற்சங்கங்கள், இளைஞர் மணிமன்றம், கோவில்கள் ஆகிய பொது நிறுவனங்களில் ஈடுபாட்டுடன் பணியாற்றியுள்ளார். தற்போது "கால நட்சத்திரங்கள் கலைப் படைப்பகம்" எனும் நிறுவனத்தை நிறுவி நாடகங்கள் படைக்கும் பணியை மேற்கொண்டுவருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையே இவர் எழுதி வருகின்றார். பல நாடகங்களை எழுதி அரங்கேற்றியுள்ளார். இசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "சங்கப் பாவை" (புறநானூற்றை அடிப்படையாகக் கொண்ட நாடக நூல் - 1998)