கோனேரியப்பர்
கோனேரியப்பர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். உபதேச காண்டம் என்னும் நூல் பாடியவர். உபதேச காண்டம் என்னும் பெயரில் மற்றொரு புலவர் ஞானவரோதயர் பாடிய நூலும் உள்ளது.
தமிழிலுள்ள இரண்டு ‘உபதேச காண்டம்’ நூல்களையும் ஒப்பிடும்போது ஞானவரோதயர் நூல் வடமொழி நூலை அடியொற்றிச் செல்வதையும், கோனேரியப்பர் நூல் தமிழிலுள்ள கந்தபுராணத்தைத் தழுவிச் செல்வதையும் உணரமுடியும். இவர் [கைக்கோளர்] செங்குந்தர்[1] மரபைச் சார்ந்தவர்.
இவர் இயற்ப்பெயர் குகநேரியப்ப முதலியார் ஆகும். சிவானந்த முதலியார் - அமுதாம்பிகை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[2]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005