கொரிய இலக்கியம்

கொரிய இலக்கியம் என்பது கொரிய மொழியிலோ அல்லது செவ்வியல் சீன மொழியிலோ கொரியர்கள் உருவாக்கும் இலக்கியம் ஆகும். கொரிய இலக்கியம் 1500 ஆண்டுகளாக ஃஅஞ்சா எழுத்தில் எழுதப்பட்டு வருகிறது. மேலும் இது செவ்வியல் இலக்கியம், புத்திலக்கியம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. கொரியா முதல் செம்பு, பொன்மப் (Metal) பயன்பாட்டுக்கும் முதல் அச்சு நூலுக்கும் முதல் அணியெழுத்துக்கும் பெயர்போனதாகும்.

புத்திலக்கியம்

கொரியாவின் பிரிவினை

1945க்குப் பின் கொரியா வட கொரியா தென்கொரியா என இரண்டாகப் பிரிந்த்து. கொரியப் போர் உருவாக்கிய சூழல் போரும் அவலமும் அதன் காயங்களும் குறித்த இலக்கிய வளர்ச்சிக்குத் தூண்டுதல் தந்தது.

வடகொரியா (கொரிய மக்கள் குடியரசு)

பிரிவினைக்குப் பின் வட கொரிய இலக்கியம் புதியதொரு திருப்பத்தைக் கண்டது. காண்க. வடகொரிய இலக்கியம்.

தென்கொரியா (கொரியக் குடியரசு)

போருக்குப் பிந்தைய தென்கொரிய இலக்கியம் எளிய மக்களின் துன்ப, துயரங்களைப் பேசியது. போர்தந்த தேசிய வெதனையைப் பேசியது.. கொரிய மரபு விழுமியங்கள் சிதைவுற்றதும் ஒரு முதன்மைக் கருப்பொருளாகியது. போருக்குப் பின் ஒரு மரபு இலக்கிய இயக்கமும் புதிய செய்முறை முயற்சிகளும் உருவாகின. மரபியக்க்க் கவிதைகள் பழைய இசைவடிவங்களிலும் நாட்டுப்புறக் கருப்பொருல்களிலும் கால்கொண்டது. புது முயற்சிக் கவிதைகள் அன்றாடக் கொரிய வாழ்க்கை பட்டறிவுகளில் திளைத்தது..

பல கொரிய எழுத்தளர்கள் 1960களுக்குப் பின் போருக்குப் பிந்தைய எழுத்தை உணர்ச்சிமயத் தப்பிப்பாக்க் கருதி புறந்தள்ளலாயினர். சில தென்கொரிய எழுத்தாளர்கள் மரபு மாந்தநேயத்தைப் போற்றி எழுதினாலும் மற்றவர்கள் அயன்மையாதல் போக்கையும்வாழ்க்கையின் அவலத்தையும் படம்பிடித்தனர். இவர்கள் மக்களை நிகழ்கால அரசியல் நிலவலைக் காணவைத்தனர்.எனவே கவிதையும் இலக்கியமும் முதன்மைவாய்ந்த அரசியல்கூர்மை அடைந்தன. இவற்றில் மாலைய புத்தியல் தன்ஐயும் ஊடுபாவாக விரவியதும் குறிப்பிடத் தக்கது. 1970களில் நிறுவன எதிர்ப்பு இலக்கியம் மலர்ந்தது. உழவரைப் புறக்கணித்து, வேகமாகத் தொழில்துறை வளர்தலை உய்யநிலையில் இலக்கியம் ஆய்ந்தது.

அதேவேளையில் இலக்கியம் தேசியப் பிரிவினையை அக்கறையோடு பேசியது. இக்கருப்பொருள் மக்களிடம் பெரிய வரவெஐப் பெற்றது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்னமும் பொதுக் கருப்பொருளாக விளங்கிவருகிறது. என்றாலும் செவ்வியல் கதைகளையும் மக்கள் விரும்புகின்றனர். தென்கொரியாவில் பல வடகொரிய எழுத்தாளர்கள் இன்று பெரிதும் வரவெற்கவும் மதிக்கவும் படுகின்றனர். 2005 இல் வட, தென் கொரிய எழுத்தாளர்களின் கூட்டு இலக்கியப் பேராயம் நட்த்தப்பட்டது.

கொரியப் புலம்பெயர் இலக்கியம்

கொரிய இலக்கியம் 1980களுக்குப் பிறகே தீவகம் தாண்டி வெளியுலகின் பார்வைக்கு வந்தது எனலாம். மொழிபெயர்க்கப்பட்ட நூல்களோ பன்முகமானவை. மொழிபெயர்ப்பின் தரமும் மேம்பட்டது.*[1] நெருப்புப் பூக்கள் (1974)[2] ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட முதல் கொரிய இலக்கியத் தொகுதி ஆகும். ஆங்கிலம் சாராத மொழிகளில் மிகவும் குறைவாகவே கொரிய இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. செருமானியம், எசுபானியம், பிரெஞ்சு, போலிசு மொழிகளில் இவற்றை மொழிபெயர்க்க கொரிய எல்.டி.ஐ உதவியது.கொரியத் திரைப்படங்களி வெற்றி கொரிய மக்கள் இலக்கிய மொழிபெயர்ப்புக்குக் குறிப்பாக, யப்பானிலும் சீனாவிலும்உந்துதல் அளித்தது.

மேற்கோள்கள்

  • Hyun, Theresa (2003). Writing Women in Korea: Translation and Feminism in the Early Twentieth Century. Honolulu: University of Hawaiʻi Press. ISBN 978-0-8248-2677-2
  • Lee, Peter H. (2013). The Story of Traditional Korean Literature. Amherst, New York: Cambria Press. ISBN 978-1-60497-853-7
  • Lee, Peter H. (1990). Modern Korean Literature: An Anthology. Honolulu: University of Hawaiʻi Press. ISBN 978-0-8248-1321-5
  • Lee, Peter H. (1981). Anthology of Korean Literature: From Early Times to the Nineteenth Century. Honolulu: University of Hawaiʻi Press. ISBN 978-0-8248-0756-6
  • McCann, David R. (2000). Early Korean Literature: Selections and Introductions. New York: Columbia University Press. ISBN 978-0-231-11947-4
  • Pihl, Marshall R (1994). The Korean Singer of Tales. Cambridge, Mass.: Harvard University Press. ISBN 978-0-674-50564-3

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கொரிய_இலக்கியம்&oldid=20077" இருந்து மீள்விக்கப்பட்டது