கையோடு கை

கையோடு கை (Kaiyodu Kai) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். ராஜன் சர்மா இயக்கிய இப்படத்தில் அரவிந்து ஆகாசு, யுகேந்திரன், புதுமுகம் சோனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இதில் ரகுவரன், மலேசியா வாசுதேவன், தலைவாசல் விஜய், கருணாஸ், எம். என். ராஜம், பசி சத்யா, சாந்தி வில்லியம்ஸ், ஸ்ரீலதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துளனர். இந்த படத்திற்கு பாணபத்ரா இசை அமைத்தார். படமானது 27 செப்டம்பர் 2003 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

கையோடு கை
இயக்கம்ராஜன் சர்மா
தயாரிப்புவாமனா பிக்சர்ஸ்
கதைராஜன் சர்மா
இசைபாணபத்திரா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. ஆர். ராஜன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்வாமனா பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 27, 2003 (2003-09-27)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

சென்னையில் வாழும் ராஜா ( அரவிந்து ஆகாசு ), மாணிக் ( யுகேந்திரன் ) ஆகியோர் சிறுவயதிலிருந்தே சிறந்த நண்பர்கள். ராஜா கல்லூரி மாணவராக இருக்கும்போது அனாதையான மாணிக் ஒரு வாகன பழுதுபார்க்கும் பணிமனையை வைத்திருக்கிறான். நித்யா (சோனா) தங்கி இருக்கும் மகளிர் விடுதிக்கு எதிரில் மாணிகின் பணிமனை உள்ளது. மாணிக் அவளை காதலிக்கிறான். ராஜாவும் நித்யாவும் கல்லூரியில் உடன் பயிலும் மாணவர்கள் மற்றும் காதலர்கள். காலையில், நித்யா விடுதி காப்பாளரிடம் நல்ல பெயர் வாங்கும் பெண்ணாக செயல்படுபவள். அவள் விடுதியைவிட்டு வெளியேறும்போது பாரம்பரிய உடை அணிந்து செல்வாள் இதைக் கண்டு மாணிக் அவளை காதலிக்கிறான். ஆனால், பின்னர், அவள் தன் தோழியின் வீட்டிற்குச் சென்று, ஆடையை மாற்றிக்கொண்டு நவீன உடையில் கல்லூரிக்குச் செல்வாள். மேலும் நித்யா ஆணாதிக்கத்தை வெறுக்கும் பெண் ஆவாள்.

கிராமத்தில் வசிக்கும் நித்யாவின் தந்தை சண்முகத்தை ( மலேசியா வாசுதேவன் ) கவர மாணிக் முடிவு செய்கிறான், மேலும் ஒரு வழக்கை தீர்க்க மாணிக் அவருக்கு உதவுகிறான். பின்னர் சண்முகம் தனது மகளை அவனுக்கு திருமணத்தில் கொடுப்பதாக உறுதியளிக்கிறார். இறுதியில் நித்யா தனது கிராமத்தில் நிச்சயதார்த்தத்தன்று மாணிக்கைப் பார்க்கிறாள். திருமண நாள், அவள் ஓடிப்போய் ராஜாவின் வீட்டிற்கு வந்துவிடுகிறாறாள். மனமுடைந்த மாணிக் மது குடிக்கத் தொடங்குகிறான். இதற்கிடையில், ராஜாவும் நித்யாவும் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பின்னர், ராஜா தான் மணந்த மனைவி நித்யாவை மாணிக்கிற்கு அறிமுகப்படுத்துகிறான். இருவரும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர் ராஜாவுக்கு எதுவும் சொல்ல மாட்டேன் என்று நித்யாவுக்கு மாணிக் உறுதியளிக்கிறான். வீட்டு வேலைகளை மட்டும் செய்துகொண்டிருக்கும் வழக்கமான ஒரு இல்லத்தரசியாக இருக்க நித்யா விரும்பவில்லை. அதனால் ராஜாவின் குடும்பத்தினரிடம் மோதல் போக்கில் ஈடுபடுகிறாள். நிலைமை நாளுக்கு நாள் மோசமடைகிறது. இதைப் பயன்படுத்தி மாணிக் இரட்டை விளையாட்டை விளையாடுகிறான்: ஒருபுறம், மாணிக் தனது நண்பர் ராஜாவுக்கு அவன் தனது மனைவியை வன்முறையால் அடக்குமாறு அறிவுறுத்துகிறான். மறுபுறம், நித்யாவிடம் அளது செயல்பாட்டை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறான்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நித்யாவும் ராஜாவும் பிரிந்து வாழ்கிறனர். அவர்கள் இப்போது தங்கள் தொழில் வாழ்க்கையில் பரபரப்பாக உள்ளனர். பெண்கள் ஆண்களுக்கு சமம் என்பதை நிரூபிக்க, நித்யா மாணிக் தன்னை பதிவுத் திருமணம் செய்து கொள்ளும்படியும், அதற்கு ராஜாவை அழைக்கிறாள். திருமணம் நடக்கும் நாளன்று மாணிக் அவளை திருமணம் செய்ய மறுத்து அவமானப்படுத்துகிறான். அவளை பழிவாங்குவதற்காக தான் அதைச் செய்யவில்லை, என்றும் ராஜா ஒரு நல்ல கணவன் என்பதை அவளுக்குப் புரியும்படி மாணிக் நித்யாவிடம் பேசுகிறான். நித்யா தன் தவறுகளை உணர்கிறாள். ராஜா அவளை மன்னித்து, தம்பதியர் ஒருவரை ஒருவர் கட்டியணைக்கின்றனர். ராஜாவும் மாணிக்கும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்க படம் முடிகிறது.

நடிகர்கள்

இசை

திரைப்படத்திற்கான பின்னணி சை மற்றும் பாடல்களுக்கான இசையை இசையமைப்பாளர் பாணபத்திரா மேற்கொண்டார். ஒலிப்பதிவில் ஆறு பாடல்கள் உள்ளன.[3]<ref>

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "இச்சுக்கலாமா"  கமராஜ், சுவர்ணலதா 5:11
2. "இன்னொரு பூமி"  கார்த்திக், ரஞ்சித் 4:54
3. "இரு மனம்"  ஹரிஹரன் 5:16
4. "பெண்ணொன்று"  கார்த்திக், ஸ்ரீநிவாஸ் 3:45
5. "சயனோர"  அனுராதா ஸ்ரீராம் 5:22
6. "சுகம் இது"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் 4:44
மொத்த நீளம்:
29:12

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கையோடு_கை&oldid=32566" இருந்து மீள்விக்கப்பட்டது