கே. டானியல்

கே. டானியல்
Kdanial.jpg
பிறப்பு 25-03-1926
பிறந்த இடம் ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்

கே. டானியல் (25 மார்ச் 1926 - ) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

"கே.டானியல் மார்க்சியக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட மகத்தான மனிதன்; கம்யூனிச இயக்கத்தின் நீண்டகால தொண்டன்; தாழ்த்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத் தலைவன்; அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சஞ்சலங்களையும், வெஞ்சமரையும் சித்தரித்த சிறப்பானதோர் இலக்கியவாதி! களம் பல கண்ட புரட்சிப் போராளி; அவரது வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை; பாட்டாளி வர்க்க இலட்சியத்தின் வெற்றிக்குத் தன்னை அர்ப்பணித்த வாழ்க்கை; மக்களின் நல்வாழ்வுக்காக அவர் தன்னையே எரித்துக் கொண்டு அரசியல், சமூக, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார்.

கே.டானியல் தாழ்த்தப்பட்ட மக்களின் சுகதுக்கங்கள், போராட்டங்களின் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றையே தமது இலக்கியப் படைப்புக்களின் கருப்பொருளாகக் கொண்டார். மக்கள் பல்கலைக்கழகத்தில் கற்றுப் பயிற்சி பெற்ற எழுத்தாளர். ‘மக்களிடமிருந்து மக்களுக்கு மக்கள் மொழியில் ’ என்பதைத் தாரகமாகக் கொண்டவர்.

             k danial  மக்களுக்கு வழிகாட்டும் போராட்ட இலக்கியங்களைப் படைக்க வேண்டும்; இலக்கியம் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு சேவை செய்ய வேண்டும். இந்த வழியில் நெறி பிறழாது நின்று பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும், நாடகங்ளையும், நாவல்களையும் எழுதியுள்ளார் என ‘மக்கள் எழுத்தாளர்’ கே.டானியலை விமர்சகர் வட்டுக்கோட்டை வீ. சின்னத்தம்பி புகழ்ந்துரைத்துள்ளார்.

“சமூக முற்போக்கு இயக்கத்தின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றான தீண்டாமை எதிர்ப்பியக்கத்தில் டானியலின் ஈடுபாடு பூரணமானது, யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் பிரதான முரண்பாடாகச் சாதிக் கொடூரத்தையே டானியல் கருத்திற் கொண்டு வந்துள்ளார். டானியலின் எழுத்துக்கள் சமூக வரலாற்றுக்கான சான்றாக அமைந்துள்ளன. சமூகக் கொடூரங்களுக்கெதிராகக் குரலெழுப்பும் ஆவேச மனிதாயவாதக் குரல் டானியலுடையது.” --பி.தயாளன்--


டானியலின் நூல்கள்

நாவல்கள்

  • பஞ்சமர்
  • கானல்
  • அடிமைகள்
  • தண்ணீர்
  • கோவிந்தன்

வேறு

  • கே.டானியலின் கடிதங்கள் (கடித இலக்கியம், 2003)

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=கே._டானியல்&oldid=2576" இருந்து மீள்விக்கப்பட்டது