கே. எல். வி. வசந்தா
கே. எல். வி. வசந்தா (K. L. V. Vasantha, 1923 - 2008) என்பவர் தமிழகத் திரைப்பட நடிகையாவார். ரம்பையின் காதல் திரைப்படத்தில் நடித்துப் புகழ் பெற்ற இவர் 17 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
K. L. V. Vasantha | |
---|---|
1945 பர்மா ராணி திரைப்படத்தில் வசந்தா | |
பிறப்பு | வள்ளிக்கண்ணு 1923 குன்னக்குடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | 2008 சென்னை, தமிழ்நாடு |
குடியுரிமை | இந்தியர் |
பணி | நடிகை, பாடகி |
வாழ்க்கைத் துணை | டி. ஆர். சுந்தரம் |
வாழ்க்கைக் குறிப்பு
இவர் 1923 ஆம் ஆண்டு குன்றக்குடியில் பிறந்தார். தாயார் பெயர் லட்சுமி அம்மாள், இவரது இயற்பெயர் வள்ளிக்கண்ணு. திரைப்படங்களில் நடிப்பதற்காக வசந்தா தேவி என மாற்றிக் கொண்டார். பின்னர் தனது பெயரை கே. எல். வி. வசந்தா (குன்னக்குடி லட்சுமி வள்ளிக்கண்ணு வசந்தா) எனச் சுருக்கிக் கொண்டார்.[1] இவர் சிறு வயதிலேயே வாய்ப்பாட்டு, நடனம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். பிற்காலத்தில் நடிகையானபோது தனது வேடங்களுக்கான பாடல்களை அவரே சொந்தமாகப் பாடி நடித்தார். இவர் 1934 இல் பவளக்கொடி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பின்னர் ஸ்கந்த லீலாவில் வள்ளியாக நடித்தார்.[1] 1939-ல் வெளியாகிய வெற்றிப்படமான ரம்பையின் காதல் படத்தின் கதாநாயகியாகப் புகழ்பெற்றார்.[2] இப்படத்தில் வசந்தா பாடிய பூலோக ஆசையாலே என்ற பாடல் மிகப் பிரபலமானது.[1]
நடித்த படங்கள்
- பவளக்கொடி, 1934
- ஸ்கந்த லீலா
- ரம்பையின் காதல், 1939
- சத்யவாணி
- பூலோக ரம்பை
- பரசுராமர்
- மதன காமராஜன், 1941 பிரேமவள்ளி
- நந்தனார், 1942
- ராஜ ராஜேஸ்வரி, 1944
- பர்மா ராணி, 1945
- சுபத்ரா
- சித்ரா
- குண்டலகேசி
- சுலோச்சனா, 1946
- சாலி வாஹனன்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "பூலோக ரம்பை வஸந்தா". ஹனுமான், சென்னை. 1948.
- ↑ பிரதீப் மாதவன் (13 அக்டோபர் 2017). "எஸ்.எஸ்.வாசனின் முதல் தெரிவு!". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19846041.ece. பார்த்த நாள்: 13 அக்டோபர் 2017.