கெம்பராஜ் அர்ஸ்

டி. கெம்பராஜ் என அழைக்கப்பட்ட தே. கெம்ராஜ் அர்ஸ் (D. Kemaparaj Urs, 5 பிப்ரவரி 1917 – 18 மே 1982) என்பவர் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், நடிகர், இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக கன்னடத் திரைப்படத்துறையில் பணியாற்றினார். [2] 1940கள் மற்றும் 1950களில் இவரது திரைப்படங்கள் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. ராஜ்குமார் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே, அர்ஸ் நன்கு பிரபலமான நட்சத்திரமாக இருந்தார். இவரது அண்ணன் டி. தேவராஜ் அர்ஸ், கர்நாடக முதல்வராக பணியாற்றினார்.

கெம்பராஜ் அர்ஸ்
Kemparaj Urs.jpeg
பிறப்புதே. கெம்பராஜ் அர்ஸ்
(1917-02-05)5 பெப்ரவரி 1917 [1]
கல்லள்ளி, அன்சூரு வட்டம், மைசூர் மாநிலம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய கருநாடகம், இந்தியா)
இறப்பு18 மே 1982(1982-05-18) (அகவை 65)
தேசியம்இந்தியர்
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1942–1964
வாழ்க்கைத்
துணை
டி. என். லலிதா
பிள்ளைகள்3

தனிப்பட்ட வாழ்க்கை

கெம்பராஜ் அர்ஸ், மைசூரில் உள்ள உன்சூர் வட்டத்தில் உள்ள கல்லள்ளி என்ற சிற்றூரில் தேவராஜ் அர்ஸ், தேவீரம்மணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது அண்ணன் டி. தேவராஜ் அர்ஸ். கெம்பராஜ் ஆங்கில இலக்கியம் படித்தவர். இவர் தனது வகுப்புத் தோழியான லலிதாவை மணந்து மூன்று மகள்களைப் பெற்றார். அர்ஸ் மருத்துவராக ஆசைப்பட்டார், ஆனால் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். [3]

தொழில்

அர்ஸ் கன்னட நாடகக் கலைஞரான குப்பி வீரண்ணாவைச் சந்தித்து, குப்பி நிறுவனத்தின் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1942 இல், ஒரு சுயாதீன தயாரிப்பாளராக, குப்பி வீரண்ணா தனது முதல் திரைப்படமான ஜீவன நாடகத்தை தனது சொந்த பதாகையான குப்பி பிலிம்ஸ் மூலம் தயாரித்தார். அப்படத்தில் சாந்தா ஊப்ளிகர், எம். வி. ராஜம்மா ஆகியோரை ஜோடியாக கொண்டு கெம்பராஜ் அர்ஸ் கதாநாயகனாக நடித்தார். [4] பின்னர் 1947-ல் கிருஷ்ணலீலா படத்தில் கம்சனாக நடித்தார். 1951 ஆம் ஆண்டு ராஜ விக்கிரமா ஒரே திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. [5] இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். உர்ஸ் "கருநாடக திரைப்பட மேம்பாட்டு வாரியத்தின்" தலைவராகவும் இருந்துள்ளார்.

சுயசரிதை

கெம்பராஜ் அர்ஸ் 1979 இல் வெளியிடப்பட்ட "அருவத்து வருசகலு" (அறுபது ஆண்டுகள்) என்ற சுயசரிதையை எழுதினார். [6]

இறப்பு

கெம்பராஜ் அர்ஸ் 18 மே 1982 இல் இறந்தார், இவருக்கு மனைவி மற்றும் மகள்கள் இருந்தனர்.

திரைப்படவியல்

ஆண்டு தலைப்பு பணி மொழி பாத்திரம் குறிப்புகள்
இயக்குநர் தயாரிப்பாளர் நடிகர்
1942 ஜீவன நாடகா  N  N  Y கன்னடம் மோகன் அறிமுகப் படம்
1947 மகாநந்தா  N  N  Y கன்னடம்
1947 கிருஷ்ணலீலா  N  N  Y கன்னடம் கம்சன்
1948 பக்த ராமதாஸ்  Y  N  Y கன்னடம் பாத் ஷா
1950 சிவா பார்வதி  N  N  Y கன்னடம்
1950 ராஜ விக்கிரமா  Y  Y  Y கன்னடம்
தமிழ்
விக்ரமா
1953 ஸ்ரீகிருஷ்ணா  N  N  Y கன்னடம்
1954 கற்கோட்டை  Y  Y  Y தமிழ்
1954 ஜலதுர்கா  Y  Y  Y கன்னடம்
1957 நள தமயந்தி  Y  Y  Y கன்னடம்
தமிழ்
1959 அழகர்மலை கள்வன்  Y  Y  N தமிழ்
1964 நவ ஜீவனா  N  N  Y கன்னடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கெம்பராஜ் அர்ஸ்

"https://tamilar.wiki/index.php?title=கெம்பராஜ்_அர்ஸ்&oldid=21657" இருந்து மீள்விக்கப்பட்டது