குல்சார்
சம்பூரண் சிங் கால்ரா (Sampooran Singh Kalra, வார்ப்புரு:Lang-pa, இந்தி: संपूरण सिंह कालरा, வார்ப்புரு:Lang-ur) (பிறப்பு: ஆகத்து 18, 1934), பரவலாக அவரது புனைப்பெயரான குல்சார் (Gulsar, வார்ப்புரு:Lang-pa, இந்தி: गुलज़ार, வார்ப்புரு:Lang-ur), ஓர் இந்திய கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர்.[1] இந்தி-உருது மொழியில் முதன்மையாக எழுதும் குல்சார் பஞ்சாபி மொழியிலும் பிராஜ் பாசா, கரிபோலி, அரியான்வி, மார்வாரி போன்ற இந்தியின் பல வட்டார வழக்குகளிலும் எழுதியுள்ளார்.
குல்சார் | |
---|---|
தனது தொகுப்பு சாந்த் பரோசா ஹை வெளியீடின்போது குல்சார் (2008) | |
பிறப்பு | சம்பூரண் சிங் கால்ரா ஆகத்து 18, 1934 தினா (பாக்கித்தான்), ஜீலம் மாவட்டம்,பஞ்சாப், பிரித்தானிய இந்தியா |
பணி | திரைப்பட இயக்குனர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் யாரிப்பாளர், கவிஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1961–செயற்பாட்டில் |
பெற்றோர் | மக்கன்சிங் கால்ரா,சுஜன் கௌர் |
வாழ்க்கைத் துணை | ராக்கி |
பிள்ளைகள் | மேக்னா குல்சார் |
குல்சாருக்கு 2002இல் சாகித்திய அகாதமி விருதும் 2004இல் பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டுள்ளது. பல தேசியத் திரைப்பட விருதுகளும் பிலிம்பேர் விருதுகளும் பெற்றுள்ளார். 2009ஆம் ஆண்டு சிலம்டாக் மில்லியனயர் (2008) திரைப்படத்தில் ""ஜெய் ஹோ"" என்ற இவரது பாடலுக்கு சிறந்த முதன்மைப் பாடலுக்கான அகாதமி விருது பெற்றார். அதே பாடலுக்காக சனவரி 31, 2010இல் கிராமி விருதும் பெற்றுள்ளார். இவருக்கு திரைப்படத்துறையினருக்கான இந்தியாவின் மிக உயரிய விருதான தாதாசாஹெப் பால்கே விருது 2013ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.[2]
குல்சாரின் கவிதைகள் மூன்று தொகுப்புகளாக சாந்த் புக்ராஜ்கா, ராத் பச்மினே கி மற்றும் பந்த்ரா பாஞ்ச் பச்சத்தர் வெளியிடப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் ராவி-பார் (பாக்கித்தானில் டஸ்ட்கத்) மற்றும் துவான் (புகை) என வெளியிடப்பட்டுள்ளன..
இசையமைப்பாளர்கள் ராகுல் தேவ் பர்மன், ஏ. ஆர். ரகுமான் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகியோருடன் பாடலாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார். பிற பாலிவுட் இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். திரைப்பாடல்கள் தவிர பல திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய திரைப்படங்களும் பல விருதுகளைப் பெற்றுள்ளன. சின்னத்திரையில் மிர்சா காலிப், தஹரீர் முன்ஷி பிரேம் சந்த் கி ஆகிய நெடுந்தொடர்களைத் தயாரித்துள்ளார்.
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
- Chatterjee, Saibal (2007). Echoes and Eloquences: The Life and Cinema of Gulzar. Rupa & Co.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-291-1235-4..
- Gulzar, Meghna (2004). Because He Is.... Rupa & Co.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-291-0364-8.. (குல்சாரின் மகள் மேக்னா குல்சார் எழுதியது)
மேற்கோள்கள்
- ↑ Amar Chandel (4 Jan 2004). "The poet as the father". Spectrum (தி டிரிப்யூன்). http://www.tribuneindia.com/2004/20040104/spectrum/book2.htm. பார்த்த நாள்: 23 Dec 2011.
- ↑ "பிரபல ஹிந்தி திரைப்பட கவிஞர் குல்ஜாருக்கு பால்கே விருது". தினமணி. 13 ஏப்ரல் 2014. http://www.dinamani.com/cinema/2014/04/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0/article2165198.ece. பார்த்த நாள்: 13 ஏப்ரல் 2014.
வெளியிணைப்புகள்
- Website dedicated to Gulzar
- Another website dedicated to Gulzar பரணிடப்பட்டது 2015-08-01 at the வந்தவழி இயந்திரம்
- Gulzar at Kavita Kosh பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம் (Hindi)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Gulzar