குலோத்துங்க சிங்கையாரியன்

குலோத்துங்க சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச வம்சத்தின் மூன்றாவது அரசனாவான். இவன் கி.பி 1284ஆம் ஆண்டு முதல் 1292 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான் என்று செ. இராசநாயகம் கணித்துள்ளார். இவன் குலசேகர சிங்கையாரியனின் மகனும், கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் பேரனும் ஆவான்.

இவனும் தன் முன்னோரைப் போலவே வேளாண்மை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்ததாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. தரிசு நிலங்களைத் திருத்தி வேளாண்மைக்கு ஏற்ற நிலங்களாக இவன் மாற்றியதாக இந் நூல் கூறுகிறது. இவனுடைய 23 ஆண்டு ஆட்சிக் காலம் அமைதிக் காலமாக விளங்கியதாகவும் கூறப்படுகின்றது.

இவனைத் தொடர்ந்து இவனது மகனான விக்கிரம சிங்கையாரியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.

வெளியிணைப்புக்கள்