குலாம் காதிறு நாவலர்

குலாம் காதிறு நாவலர் (நாகூரில் 19ஆம் நூற்றாண்டு, 1833 - 1908) ஒரு தமிழ் புலவர் ஆவார். இவர் தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இவர் எழுதிக்குவித்த இலக்கியங்கள் அனேகம். கவிதை இலக்கியங்கள் பத்தொன்பது. உரைநடை இலக்கியங்கள் ஏழு. மொழிபெயர்ப்பு நூல்கள் மூன்று. இலக்கண நூல்கள் இரண்டு. இதர நூல்கள் இரண்டு. காப்பியங்கள், கலம்பகங்கள், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரை நூல்கள் என இவர் 24 நூல்களை எழுதியுள்ளார் அதனை தமிழக அரசு 2007 ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது. காப்பியங்கள், கலம்பகம், கோவைகள், அந்தாதிகள், மாலைகள், உரைநூல்கள் என அவர் இயற்றிய இலக்கிய வகைகள் அனேகம். நாகூர் நாயகத்தின் வரலாற்றை முதல் முதலில் நூலாகக்(கன்ஜுல் கறாமாத்து) கொண்டு வந்தவர் குலாம் காதிறு நாவலர் தான்.இவர் நான்காவது நக்கீரர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார். இவரின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவர் தான் மறைமலை அடிகளார்.[சான்று தேவை]

இளமைப்பருவம்

குலாம் காதிரு அவர்கள் 1833ஆம் ஆண்டு நாகூரில் உள்ள செல்வசெழிப்பான தமிழ் இராவுத்தர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஆயுர்வேத பாஸ்கர பண்டித வாப்பு இராவுத்தர். இவரது முன்னோர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து நாகூரில் குடியேறினர்

படைப்புகள்

  1. கன்சூல் கறாமத்து[1]
  2. நாகூர்ப் புராணம்
  3. ஆரிபு நாயகம்
  4. புலவராற்றுப்படை
  5. அரபுத் தமிழ் அகராதி
  6. முகாஷஃபா மாலை
  7. உமறு பாஷா யுத்த சரித்திரம், ரைனால்ட்ஸ். தமிழாக்கம்.
  8. பொருந்தா இலக்கணம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குலாம்_காதிறு_நாவலர்&oldid=14416" இருந்து மீள்விக்கப்பட்டது