குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்

குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் (திருக்கண்ணார் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 17வது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கண்ணார்கோயில், திருக்கண்ணார் கோயில்
அமைவிடம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சகஸ்ர நேத்ராசுவரர்[1]
தாயார்:சுகுந்த குந்தளாம்பிகை, முருகுவளர்கோதை
தல விருட்சம்:சரக்கொன்றை
தீர்த்தம்:இந்திரதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை - சீர்காழி சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கதிராமங்கலம் எனுமிடத்திலிருந்து வலப்புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

சிறப்புகள்

இந்திரன் வழிபட்டுச் சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கையாகும். திருமணமாகாதோர் இக்கோயிலுக்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது. இத்தலத்தின் தலமரம் சரக்கொன்றை.

வழிபட்டோர்

திருமால் வாமன மூர்த்தியாக (குறுமாணி) வழிபட்ட தலம்.[1]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 128,129

வெளியிணைப்புகள்