கும்பகோணம் முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில்
கும்பகோணத்தில் உள்ள காளியம்மன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1]
இருப்பிடம்
கும்பகோணத்தின் நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில், நாகேஸ்வரன் கோயிலின் வலது புறம் இக்கோயில் அமைந்துள்ளது. இதே வீதியில் யானையடி அய்யனார் கோயில், ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில் படைவெட்டி மாரியம்மன் கோயில் பகவத் விநாயகர் கோயில் ஆகிய கோயில்களும் உள்ளன.
மூலவர்
மிகவும் சிறியதாக உள்ள இக்கோயிலில் எண்ணெய் விளக்கை மாடத்தில் வைத்து அம்மனாகப் பாவித்து வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மார்கழி முதல் நாள் தொடங்கி பங்குனி பத்தாம் நாள் வரை அம்மனை வைக்கின்றனர். தெருக்களின் சந்திப்பில் இக்கோயில் உள்ளதால் முச்சந்தி காளியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992