கும்பகோணம் மாநகராட்சி
கும்பகோணம் மாநகராட்சி (Kumbakonam City Corporation) என்பது இந்தியாவில் தென்மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பகோணம் மாநகராட்சியின் தலைமையிடம் ஆகும். தமிழ்நாட்டின் 16-வது மாநகராட்சியாக 24.08.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் அறிவித்தார். 15 அக்டோபர் 2021 அன்று 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் மாநகராட்சியை நிறுவ தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.[1][2]
கும்பகோணம் மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
மாநகராட்சி மேயர் | சரவணன் 04 மார்ச்2022 |
துணை மேயர் | சு.ப. தமிழழகன் 04 மார்ச் 2022 |
மாநகராட்சி ஆணையாளர் | செந்தில் முருகன் |
கூடும் இடம் | |
[மாநகர மண்டபம்] |
கும்பகோணம் நகராட்சி
கும்பகோணம் 1866-ம் ஆண்டு முதல் நகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது. 4.96 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நகரில் 2011-ம் ஆண்டு கணக்கின்படி 1,40,113 பேர் 45 வார்டுகளில் வசித்து வருகின்றனர். 1866-ம் ஆண்டு மூன்றாம் நிலையாகவும், 1949 -லிருந்து முதல் நிலையாகவும், 1974-லிருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.
- மாநகராட்சி மேயர்* ரா.சரவணன்.(காங்கிரஸ்)
- துணை மேயர்* சு.ப. தமிழழகன்.(திமுக)
- மாநகராட்சி ஆணையர்* ம.செந்தில்முருகன்.
மாநகராட்சிப் பகுதிகள்
புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் கும்பகோணம் நகராட்சி, தாராசுரம் பேரூராட்சி, வலையப்பேட்டை ஊராட்சியின் பகுதிகள், பாபுராஜபுரம் ஊராட்சியின் பகுதிகள், அசூர் ஊராட்சியின் பகுதிகள் , பழவந்தான்கட்டளை ஊராட்சி, பெருமாண்டி ஊராட்சி முழுமையாக, கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சி முழுமையாக, சாக்கோட்டை ஊராட்சி முழுமையாக, உமாமகேஸ்வரபுரம் ஊராட்சியின் பகுதிகள், தேப்பெருமாநல்லூர் ஊராட்சியின் பகுதிகள், ஏராகரம் ஊராட்சியின் பகுதிகள் மற்றும் மலையப்பநல்லூர் ஊராட்சியின் பகுதிகளைக் கொண்டது.
மாநகராட்சி பரப்பளவு
கும்பகோணம் நகராட்சி-யாக செயல்பட்டபோது சுமார் 12.58 சதுர கிலோமீட்டர் ஆக இருந்தது. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் இதன் பரப்பளவு சுமார் 42.95 சதுர கிலோ மீட்டராக உள்ளது. மற்றும் 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது
மாநகராட்சி தேர்தல், 2022
2022-ஆம் ஆண்டில் இம்மாநகராட்சியின் 48 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 42 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கே. சரவணன் மற்றும் திமுகவின் தமிழழகன் துணை மேயராக வெற்றி பெற்றனர்.[3]
சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்
கும்பகோணம் நகரத்தின் மையத்தில் ஆதிகும்பேசுவர சுவாமி கோயில் அமைந்துள்ளது.
- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மகம் திருவிழா மகாமகக் குளம் மையத்தில் அமைந்துள்ளது.
- திருநாகேஸ்வரத்தில் ராகுஸ்தலம் என்றழைக்கப்படும் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.
- 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதிக்கு அடுத்தபடியாக கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
- தென் திருப்பதி என்றழைக்கப்படும் உப்பிலியப்பன் கோயில்
- தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில்
- கணித மேதை சீனிவாச இராமானுசன் வாழ்ந்த இல்லம் கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் நினைவு இல்லமாக அமைந்துள்ளது.
- ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் சுவாமிமலையில் அமைந்துள்ளது.