குன்றக்குடி

குன்றக்குடி (ஆங்கிலம்: Kundrakudi) தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மாநகராட்சிக்கு மிக அருகில் இருக்கிறது. இது காரைக்குடி புறநகர் ஆகும். இவ்வூர் மிகவும் புகழ் பெற்ற கோயில் தலங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை ஆதீனம் இவ்வூரில் அமைந்துள்ளது. இதன் 45ஆவது மகாசந்நிதானமாகிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் இவ்வூருக்கு மிகவும் பெருமை சேர்த்தார். கிராம வளர்ச்சித் திட்டங்களில் பெரும் ஆர்வம் காட்டிய இவர்தம் பணிகள் மத்திய அரசினரால் குன்றக்குடி மாதிரித் திட்டம் என்னும் பெயரில் இந்தியாவெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

படிமம்:குன்றக்குடி சண்முகநாதப் பெருமான்.JPG
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான்

குன்றக்குடியில் முருகன் கோயிலும் மற்றும் குடைவரை கோயிலும் அமைந்துள்ளது.

பொ.ஊ. 17ஆம் நூற்றாண்டில் சிவகங்கை தளவாய் தாண்டவராய பிள்ளை இக் கோவிலை சீரமைத்து கோவில் அருகில் வையாபுரி எனும் குளத்தையும் நந்தவனத்தையும் அமைத்தார் மேலும் வேத பாடசாலையும் அமைத்துக்கொடுத்தார்.

குன்றக்குடி என்பது மறுவி குன்னக்குடி என்றும் பரவலாக குறிப்பிடப்படுகிறது.[1]

புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த ஊர் இது.

இதனையும் பாருங்கள்

மேற்கோள்கள்

  1. "பெயரும் பெயர்க் காரணமும்..." கருத்துக்களம். 2014-02-12. பார்க்கப்பட்ட நாள் 2024-07-17.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குன்றக்குடி&oldid=131651" இருந்து மீள்விக்கப்பட்டது