குணபதி
குணபதி (பிறப்பு: சூன் 21 1955) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். கே. ஏ. குணா என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் சமூக வியூக அறவாரியத்தில் குடும்ப மேம்பாட்டு அதிகாரியாக கடமையாற்றி வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1980-ஆம் ஆண்டு தொடக்கம் கட்டுரைகளை எழுதிவருகின்றார்.
பத்திரிகைத்துறை
மலேசியாவிலிருந்து வெளிவரும் தமிழ் நேசன், தமிழ் ஓசை உட்பட வேறும் சில பத்திரிகைகளில் துணையாசிரியராக பணியாற்றிய இவர் 'தலைவன்' எனும் வார இதழையும் நடத்தியுள்ளார்.
நூல்கள்
- "டத்தோ ச. சாமிவேலு வாழ்க்கை வரலாறு" (1986)
- "சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்" (ஆய்வு நூல் 1999)
பரிசில்களும், விருதுகளும்
- டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் பரிசு
இவரது "சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்" நூல் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்ட பரிசு (1999)
- சிறந்த பத்திரிகையாளர் விருது - மலேசியப் பத்திரிகைக் கழகத்தின் தமிழ்ப் பத்திரிகைப் பிரிவு (1987)
- "எழுத்தாய்வுச் செம்மல்"விருது - பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் (1986)
வெளி இணைப்புகள்
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் குணபதி பக்கம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்