கீழக்கரை வட்டம்

கீழக்கரை வட்டம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் 9 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] இத்தாலுக்கா இராமநாதபுரம் வட்டத்தின் கீழக்கரை, உத்தரகோசமங்கை மற்றும் திருப்புல்லாணி குறுவட்டங்களைக் கொண்டு 1 ஏப்ரல் 2018ல் புதிதாக நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலுகம் கீழக்கரையில் செயல்படுகிறது.[2] இவ்வட்டத்தில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

வட்ட நிர்வாகம்

கீழக்கரை வட்டத்தில் உத்தரகோசமங்கை, கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி என மூன்று உள்வட்டங்களும், , 26 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[3]

உத்தரகோசமங்கை குறுவட்டதிலுள்ள் வருவாய் கிராமங்கள்

  1. எக்ககுடி
  2. பனைகுளம்
  3. மாலங்குடி
  4. மல்லல்
  5. ஆலங்குளம்
  6. உத்தரகோசமங்கை
  7. நல்லிருக்கை

கீழக்கரை குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. பனையடியேந்தல்
  2. வேளானூர்
  3. மாணிக்கனேரி
  4. புல்லந்தை
  5. மாயாகுளம்
  6. கீழக்கரை
  7. காஞ்சிரங்குடி
  8. குளபதம்
  9. இதம்பாடல்
  10. ஏர்வாடி

திருபுல்லாணி உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. திருப்புல்லாணி
  2. பள்ளமோர்குளம்
  3. களரி
  4. வெள்ளாமரிச்சுக்கட்டி
  5. குதக்கோட்டை
  6. களிமண்குண்டு
  7. வண்ணான்குண்டு
  8. பெரியபட்டணம்
  9. ரெகுநாதபுரம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கீழக்கரை_வட்டம்&oldid=128412" இருந்து மீள்விக்கப்பட்டது