கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1] 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh at Mahanit Audio Launch.png
பிறப்பு17 அக்டோபர் 1992 (1992-10-17) (அகவை 32)
சென்னை, தமிழ்நாடு,
 இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1992–2002,
2013–தற்போது வரை
பெற்றோர்சுரேஷ்குமார்
மேனகா

வாழ்க்கைக் குறிப்பு

கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். இவருடைய தந்தை மலையாளம், தாயார் தமிழ் ஐயங்கார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

திரை வாழ்க்கை

நடித்த திரைப்படங்கள்

குறியீடுகள்
  திரைப்படங்கள் இன்னமும் வெளியாகவில்லை
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இயக்குநர் மொழி குறிப்புகள்
2000 பைலட்ஸ் ரவி அஞ்சால் மலையாளம் குழந்தை நட்சத்திரமாக
2001 அச்சனே எனக்கு இஷ்டம் சுரேஷ் கிருஷ்ணா மலையாளம் குழந்தை நட்சத்திரமாக
2002 குபேரன் சுந்தர் தாஸ் மலையாளம் குழந்தை நட்சத்திரமாக
2013 கீதாஞ்சலி கீதா / அஞ்சலி பிரியதர்சன் மலையாளம்
2014 ரிங் மாஸ்டர் கார்த்திகா ரபி மலையாளம்
2015 இது என்ன மாயம் மாயா ஏ. எல். விஜய் தமிழ்
2016 நேனு சைலசா சைலசா கிஷோர் திலக் தெலுங்கு
ரஜினி முருகன் கார்த்திகா பொன்ராம் தமிழ்
தொடரி சரோஜா பிரபு சாலமன் தமிழ்
ரெமோ காவ்யா பாக்கியராஜ் கண்ணன் தமிழ்
2017 பாம்பு சட்டை ஆதம் தாசன் தமிழ்
பைரவா பரதன் தமிழ்
நேனு லோக்கல் கீர்த்தி தெலுங்கு
2018 தானா சேர்ந்த கூட்டம் மது விக்னேஷ் சிவன் தமிழ்
சாமி 2 தியா விசுவநாதன் ஹரி தமிழ்
சர்கார் நிலா தமிழ்
சண்டக்கோழி 2 செம்பருத்தி தமிழ்
சீமராஜா சீமராஜா, கடம்பவேல் ராஜா தமிழ்
மகாநதி சாவித்திரி தெலுங்கு
அக்ன்யாதவசி சுகுமாரி தெலுங்கு
2019 மன்மதுடு 2 சுமா தெலுங்கு சிறப்பு தோற்றம்
2020 பென்குயின் - தமிழ்
மிஸ் இந்தியா மானஸா சம்யுக்தா தெலுங்கு
2021 ஜாதி ரத்னலு வனஜாக்ஷி தெலுங்கு சிறப்பு தோற்றம்
ரங் தே அனுபமா தெலுங்கு
அண்ணாத்த தங்க மீனாட்சி தமிழ்
மரக்கர்: அரபிகடலின் சிம்மம் அர்ச்சா மலையாளம்
2022 குட் லக் சகி சகி தெலுங்கு
சாணி காயிதம் பொன்னி தமிழ்
சர்க்காரு வரி பாட கலாவதி தெலுங்கு
வாஷி மாதவி மோகன் மலையாளம்
2023 தசரா வெண்ணிலா தெலுங்கு
மாமன்னன் லீலா தமிழ்
போலா சங்கர் மகாலெக்ஷ்மி தெலுங்கு
2024 சைரன் நந்தினி தமிழ்
ரகுதாதா + கயல்விழி தமிழ் (படப்பிடிப்பு)
ரிவால்வர் ரீட்டா + ரீட்டா தமிழ் (படப்பிடிப்பு)
கன்னி வெடி + - தமிழ் (படப்பிடிப்பு)
குழந்தை ஜான் + - ஹிந்தி (படப்பிடிப்பு)

பெற்ற விருதுகள்

  • சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது - கீதாஞ்சலி (2014)[2]
  • சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014)
  • சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது - கீதாஞ்சலி (2014)
  • சிறந்த துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருது - கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர் [3]
  • 2018 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது - மகாநதி என்ற தெலுங்கு திரைப்படத்தில் (தமிழில் - நடிகையர் திலகம்) பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பாத்திரத்தில் நடித்தமைக்காக வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

  1. "Characters Which Has Scope To Perform Excites Me, Says Keerthi Menaka". www.filmibeat.com இம் மூலத்தில் இருந்து 21 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140721135331/http://entertainment.oneindia.in/malayalam/news/2014/characters-scope-to-perform-excites-me-says-keerthi-menaka-145418.html. பார்த்த நாள்: 18 November 2014. 
  2. "16th Asianet Film Award 2014 Winners List". kerala9.com இம் மூலத்தில் இருந்து 7 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181007204402/http://www.kerala9.com/news-category/news/movie-news/16th-asianet-film-award-2014-winners-list. பார்த்த நாள்: 18 November 2014. 
  3. "Vayalar Samskarika Vedi Awards". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/Vayalar-Samskarika-Vedi-Awards/2014/05/12/article2220305.ece. பார்த்த நாள்: 18 November 2014. 
  4. "சாவித்திரி கேரக்டர் சவாலாக இருந்தது...! தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்". நியூஸ் 18 தமிழ். 10 ஆகத்து 2019. https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-keerthy-suresh-shares-happy-about-national-award-vin-191897.html. பார்த்த நாள்: 13 ஆகத்து 2019. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கீர்த்தி_சுரேஷ்&oldid=22578" இருந்து மீள்விக்கப்பட்டது