கிமு 10ஆம் ஆயிரமாண்டு

கிமு 10-ஆம் ஆயிரமாண்டு (10th millennium BC) என்பது கிமு 10000 ஆம் ஆண்டு முதல் 9001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைக் குறிக்கும். இவ்வாயிரமாண்டு ஒலோசீன் ஊழியின் முதற் பகுதியாகக் கருதப்படும் இடைக் கற்காலம் மற்றும் எப்பிபெலியோலிதிக்கு (Epipaleolithic) காலங்களின் ஆரம்பக் கட்டமாகும். தென்மேற்கு ஆசியாவில் நெல் மற்றும் சிறுதானியங்களின் அடிப்படை வேளாண்மை தொடங்கிய காலகட்டம்.[1] இக்காலகட்டத்தில் வளமான நிலங்களில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அடுத்த 2,000 ஆண்டுகளுக்கு வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகள் பெரும்போக்காக கடைப்பிடிக்கப்படவில்லை.

ஆயிரமாண்டு:
நூற்றாண்டு:
  • கிமு 100-ஆம் நூற்றாண்டு
  • கிமு 99-ஆம் நூற்றாண்டு
  • கிமு 98-ஆம் நூற்றாண்டு
  • கிமு 97-ஆம் நூற்றாண்டு
  • கிமு 96-ஆம் நூற்றாண்டு
  • கிமு 95-ஆம் நூற்றாண்டு
  • கிமு 94-ஆம் நூற்றாண்டு
  • கிமு 93-ஆம் நூற்றாண்டு
  • கிமு 92-ஆம் நூற்றாண்டு
  • கிமு 91-ஆம் நூற்றாண்டு

உலக மக்கள் தொகை ஒன்று தொடக்கம் பத்து மில்லியன் ஆகக் காணப்பட்டது,[2] இதில் பெரும்பாலானவர்கள் அண்டார்டிக்கா மற்றும் சிலாந்தியா கண்டங்களைத் தவிர மற்றைய கண்டங்களில் உணவுதேடி வேட்டையாடும் சமூகத்தை சார்ந்த குழுக்களாகவே பல இடங்களில் சிதறிக் காணப்பட்டனர். பனிப்பாறையாக்கத்தின் பல பகுதிகள் முடிவுக்கு வந்ததனால், உலகின் வடக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றம் நிகழத்தொடங்கியது.

நிகழ்வுகள்

  • கிமு 10,000:மெசொப்பொத்தேமியாவில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் துவங்கியது. லெவண்ட் பகுதியில் நூத்துபியப் பண்பாடு விளங்கியது.
  • கிமு 10,000: மீசோலிதிக் காலப்பகுதியின் முதலாவது குகைச் சித்திரங்கள் சண்டை மற்றும் சமைய நிகழ்வுகளை சித்தரிக்கும் வண்ணம் வரையப்பட்டது.
  • கிமு 10,000: சுரைக்காய் பயிரிடப்பட்டு திரவம் கொண்டுசெல்லும் போத்தல்களாக பயன்பட்டது.
  • கிமு 10,000: இறுதிப் பனிப்பாறையாக்கம் முடிவுக்கு வந்தது.
  • கிமு 9,700: பெலிஸ்டோசின் சகாப்த்தம் முடிவுக்கு வந்து கோலோசின் சகாப்தம் தொடங்கியது.
  • கிமு 9,700: அறுவடை செய்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விவசாய அறுவடை என்று கருதவேண்டியதில்லை. காட்டுப்புற்கள் அனத்தோலியா என்கிற பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டிருக்கலாம்.
  • கிமு 9,500: கொபெக்லி தேபே என்கிற ஆலையத்தொகுதி கட்டுமானம் செய்யப்பட்டது.
  • கிமு 9,300: அத்திமரப் பழங்கள் ஜோர்டான் ஆற்றுப் பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்டன.
  • கிமு 9,100: நாமறிந்த மிகப்பழைய பெரும்கற்கள் கொபெக்லி தேபே ஆலையத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டன. சில பெரும்கற்களின் எடை 20 தொன்.
  • கிமு 9,000: புதிய கற்கால கலாச்சாரம் பழைய அண்மைய கிழக்கில் உதயமாகியது.

மேற்கோள்கள்

  1. Roberts (1994)
  2. Data from History Database of the Global Environment. Netherlands Environmental Assessment Agency (MNP), Bilthoven, The Netherlands.

துணை நூல்கள்

"https://tamilar.wiki/index.php?title=கிமு_10ஆம்_ஆயிரமாண்டு&oldid=144824" இருந்து மீள்விக்கப்பட்டது