காமயக்கவுண்டன்பட்டி
காமயகவுண்டன் பட்டி (ஆங்கிலம்:Kamayagoundanpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 16,134 மக்கள்தொகையும், 13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1][2]
காமயகவுண்டன்பட்டி பேருராட்சி முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையானது இப்பேருராட்சியின் கிழக்குப்பக்கம் அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் திராட்சை பயிரிடுதல் முக்கிய தொழிலாகும். மேலும் திராட்சை பழரசம் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது.
ஆதாரங்கள்
- ↑ காமயகவுண்டன் பட்டி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Kamayagoundanpatti Town Panchayat City Population Census 2011-2024". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-08-12.