காசிக் கலம்பகம்

காசிக் கலம்பகம் [1] குமரகுருபரர் பாடிய நூல்களுள் இதுவும் ஒன்று. கலம்பகம் என்ற இலக்கிய வடிவிற் காசி பற்றி அமைந்துள்ளதாற் காசிக் கலம்பகம் என்னும் பெயர் இதற்கு உரியதாகிறது. கலம்பகம் என்பது பல வகை மலர்களால் இணைக்கப் பெற்ற மாலை போன்று பல வேறுபட்ட பாக்களாலும், பாவனைகளாலும் அமைத்திருக்கும்.

பாடிய வரலாறு

குமரகுருபரர் தில்லி சுல்தான்களின் காலத்தவர். காசிக்கு யாத்திரை சென்ற காலத்தில் மன்னனின் கவனத்தை அவர் பெற்று சுல்தான் ஒருவன் நன்கொடையாகக் கொடுத்த நிலத்திலே குமரகுருபரர் குமாரசுவாமி மடம் அமைத்தார். காசி நகரைப் பார்த்த பின் அதனைப் பற்றிய அபிமான உணர்வுடன் கலம்பகமாகக் குமரகுருபரர் இதைப் பாடியுள்ளார்.

நூல் அமைப்பு

நூலிலுள்ள முதலாவது பாடல் விநாயகர் பற்றியது. அடுத்து வரும் பாடல்கள் காசி விசுவநாதரின் சிறப்புக்களை வர்ணிக்ககின்றன. அத்துடன் காசியின் தலமகிமை சிறப்பிக்கப்படுகின்றது. தூது என்னும் பகுதியிலே தலைவிக்காகத் தோழி இறைவனிடம் குருகினைத் தூதனுப்புகின்றமை வர்ணிக்கப்படுகின்றது. இறைவனின் புயபராக்கிரமம் அநுக்கிரகச் செயல்கள் என்பன விளக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 115. 

வெளி இணைப்பு


"https://tamilar.wiki/index.php?title=காசிக்_கலம்பகம்&oldid=14591" இருந்து மீள்விக்கப்பட்டது