கவிராயர் ஈசுவர சிவ உடையார்

கவிராயர் ஈசுவர சிவ உடையார் என்பவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238) காலத்தவர். இந்தப் பாண்டியன் காலத்தில் கானப்பேர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தவன் திருகானப்பேர் உடையான் என்னும் குறுநில மன்னன். இவனுக்கு ஆசிரியராக விளங்கியவர் இந்தக் கவிராயர் ஈசுவர சிவ உடையார். குறுநில மன்னன் திருக்கானப்பேர் உடையான் தன் ஆசிரியருக்கு விளங்கிளி நல்லூர் என்னும் ஊரினை முற்றுட்டாக வழங்கிப் பாராட்டினான்.[1]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. திருப்பத்தூர் அரண்மனைச் சிறுவயல் ஊரிலுள்ள திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238) கல்வெட்டு.