களவு தொழிற்சாலை (திரைப்படம்)
களவு தொழிற்சாலை (Kalavu Thozhirchalai) டி.கிருஷ்ணசாமி என்பவர் இயக்கி 2017இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தில் கதிர், குஷி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வம்சி கிருஷ்ணா, மு. களஞ்சியம், ரேணுகா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். 2013இல் படப்பிடிப்பு துவங்கியது . ஆனால் இந்தத் திரைப்படம் 2017இல் வெளிவந்து பல கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது இப்படம் இந்தி மொழியிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.
களவு தொழிற்சாலை | |
---|---|
திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி | |
இயக்கம் | டி. கிருஷ்ணசாமி ஜான் |
தயாரிப்பு | எஸ். ரவிசங்கர் |
கதை | டி. கிருஷ்ணசாமி |
இசை | சியாம் பெஞ்சமின் |
நடிப்பு | கதிர் குஷி வம்சி கிருஷ்ணா மு. களஞ்சியம் ரேணுகா செந்தில் |
ஒளிப்பதிவு | வி. தியாகராஜன் |
படத்தொகுப்பு | யோக பாஸ்கர் |
கலையகம் | எம்ஜிகே மூவி மேக்கர்ஸ் |
விநியோகம் | வெங்கீஸ் பிலிம் இண்டர்நேஷனல் |
வெளியீடு | 22 செப்டம்பர் 2017 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | ? |
கதைச்சுருக்கம்
இக்கதை கிராமத்திலுள்ள ஒரு கோவிலின் கடவுள் சிலையை கடத்துவதைப் பற்றியது. கதை ஒரு சர்வதேச குற்றவாளியான இராம் சஞ்சய் (வம்சி கிருஷ்ணா) தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் மருந்திஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் பண்டைய மரகத லிங்கச் சிலையைக் கடத்தும் எண்ணத்துடன் வருகிறான். கோவில் ஆராய்ச்சிக்காக வந்த ஒரு பத்திரிகையாளரின் உதவியுடன் கோவிலுக்குள் நுழைகிறான். பிள்ளையார் சிலைகளை திருடுகிற திருடனான இரவியின் (கதிர்) உதவி அவனுக்கு கிடைக்கிறது.[1] இரவி நிறைய பணம் சம்பாதித்து தனது காதலி வாணியுடன் இரெபேக்கா வசதியாக வாழ விரும்புகிறான். எனவே அவன் இராமுடன் கோவிலுக்குள் நுழைந்து அவர்களின் திட்டப்படி, கோவிலில் இருந்து மரகத லிங்கத்தை திருடுகின்றனர். இரவி தனது பங்கைப் பெற்றுக்கொள்கிறான். காணாமல் போய்விட்ட அந்த சிலையை கண்டுபிடிக்க காவல்துறை சிறப்பு அதிகாரியான இர்ஃபான் (மு. களஞ்சியம்) அவ்வூருக்கு வருகிறார். அவர் எப்படி சிலைத்திருட்டை கண்டுபிடிக்கிறார் என்பது மீதிக்கதையாகும்.[2]
நடிகர்கள்
- இரவியாக கதிர்
- இராம் சஞ்சயாக வம்சி கிருஷ்ணா
- இர்ஃபானாக மு. களஞ்சியம்
- வாணியாக இரெபேக்கா
- செந்தில்
- ரேணுகா
தயாரிப்பு
குற்றம் சாட்டப்பட்ட சிலைத்திருட்டு கும்பலைப் பற்றிய காவல் துறை உயர் அலுவலர் காதர் பாஷாவின் ஒரு நேர்காணல் இப்படத்திற்கான உத்வேகம் தந்தது என் இப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்[3] 2014இல் தொடங்கப்பட்ட இந்த படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் காலதாமதமாக வெளிவந்தது.[3] இப்படத்திற்கு பின்னர் தமிழக அரசு கோவில்களுக்கு உள்ளே படமெடுக்க அனுமதிக்கவில்லை.[4][5]
ஒலித்தொகுப்பு
சியாம் பெஞ்சமின் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[6]
வெளியீடு
களவு தொழிற்சாலை' 2017இல் தமிழகமெங்கும் பல திரைப்படங்கள் வெளியான நாளில் வெளிவந்தது.[7] இது பல கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[8] இப்படம் சரியான முயற்சியில்லாமல் எடுக்கப்பட்டுள்ளதென சில்வர்ஸ்க்ரீன்.இன் என்ற இணையதளம் விமர்சனம் செய்துள்ளது.[9] தி டெக்கன் குரோனிக்கள் நல்ல கதை ஆனல் படம் மெதுவாக நகர்கிறதென விமர்சித்திருந்தது.[10]
மேற்கோள்கள்
- ↑ https://m.timesofindia.com/entertainment/tamil/movie-reviews/kalavu-thozhirchalai/movie-review/60804707.cms
- ↑ https://m.imdb.com/title/tt7419382/plotsummary?ref_=m_tt_ov_pl
- ↑ 3.0 3.1 "Tamil movie 'Kalavu Thozhirchalai' shooting spots". deccanchronicle.com. 30 April 2014. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
- ↑ "A film on idol robberies". 18 September 2017.
- ↑ "Vijay Sethupathi all praise for Kalanjiam". deccanchronicle.com. 21 March 2016. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Shyam-Benjamin-makes-his-debut-as-a-composer/articleshow/36702830.cms
- ↑ "Nine films to hit screens on September 22 - Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
- ↑ "Kalavu Thozhirchalai Movie Review, Trailer, & Show timings at Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
- ↑ "Kalavu Thozhirchalai Review: Uninspired Crime Thriller That Doesn't Make An Effort To Engage - Silverscreen.in". silverscreen.in. 23 September 2017. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.
- ↑ "Kalavu Thozhirchala movie review: Travels at a slow speed with predictable script". deccanchronicle.com. 22 September 2017. பார்க்கப்பட்ட நாள் 24 September 2017.