களவுக்காய்

களவுக்காய் மகளிரின் விளையாட்டுப் பொருள்களில் ஒன்று. களவு என்பது களாக்காய் அல்லது களாப்பழம். கன்னங் கரேர் என்று இருக்கும். [1]

வையையாற்றில் புனலாடச் சென்ற மகளிர் பந்து, கழங்கு, களவு ஆகிய விளையாட்டுப் பொருள்களை உடன்கொண்டு சென்றனர். புனலாட வந்த மைந்தர் அவற்றை எடுத்துக்கொண்டு ஓடி, புனலில் பாய்வதுபோல் பாசாங்கு காட்டி, மகளிரிடம் குறும்பு செய்தனர் என்கிறது பரிபாடல்.[2]

களவுக்காய்களை மகளிர் கழங்குபோல் தூக்கிப்போட்டு விளையாடப் பயன்படுத்தினர் போலும். களாக்காய்களைப் போன்ற கருமணிகளைக் கண்ணியாகக் கட்டி அணிந்துக்கொண்ட அரசன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்.

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. களவினைக் காரெனச் செய்தாரும் இல் – நாலடியார் 103
  2.  
    பந்தும் கழங்கும் பல களவும் கொண்டோடி
    அந்தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர் - பரிபாடல் 10 அடி 107-108

"https://tamilar.wiki/index.php?title=களவுக்காய்&oldid=13170" இருந்து மீள்விக்கப்பட்டது