களனி
களனி (English: Kelaniya, சிங்களம்: කැලණිය), இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் கொழும்புக்கு அண்மையில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரை ஊடறுத்து களனி ஆறு பாய்கின்றது. இவ்வாற்றங்கரையிலுள்ள களனி விகாரை மிகவும் பிரபலமானது. மகாவம்சத்தில் இந்நகருக்கு கௌதம புத்தர் வந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது[1].
மேற்கோள்கள்
- ↑ Wilhelm Geiger (Tr), The Mahavamsa, or The Great Chronicle of Ceylon, Oxford, OUP, 1920. http://lakdiva.org/culavamsa/vol_0.html பரணிடப்பட்டது 2008-10-30 at the வந்தவழி இயந்திரம்