களத்தூர் கிராமம்
களத்தூர் கிராமம் (Kalathur Gramam) என்பது என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். சரண் கே அத்வைதன் இயக்கிய இப்படத்தில் கிஷோர், யக்னா செட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, தருண் சத்ரியா ஒரு முக்கிய வேத்தில் நடித்துள்ளார்.[1][2][3]
களத்தூர் கிராமம் | |
---|---|
இயக்கம் | சரண் கே அத்வைதன் |
தயாரிப்பு | ஆவுடையதாய் இராமமூர்த்தி |
இசை | இளையராஜா |
நடிப்பு | கிஷோர் யக்னா செட்டி தமிழ் கிருஷ்ணமூர்த்தி @ மிதுன் குமார் சுலில் குமார் ரஜினி மகாதேவையா |
ஒளிப்பதிவு | புஷ்பராஜ் சந்தோஷ் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | ஏ. ஆர். மூவி பாரடைஸ் |
வெளியீடு | 27 அக்டோபர் 2017 |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2.15 கோடி |
மொத்த வருவாய் | தொராயமாக. ₹2.83 – 3.18 கோடி |
சுருக்கம்
70 -80 கள் -90 களின் 3 தசாப்தங்களை உள்ளடக்கிய 'அதிரடி-நாடகத் திரைப்படம்' என்ற வகையில் குறிப்பிட்டக் காலத்தில் கதை நிகழ்வதாக உள்ள திரைப்படம் களத்தூர் கிராமம் ஆகும். இந்த படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான தகராறின் சகாப்தத்தை விவரிக்கிறது, மேலும் ஆந்திராவின் எல்லையில் தமிழகத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ' களத்தூர் கிராமம்' என்ற கிராமத்தில் நடந்த நிகழ்வுகளையும் சித்தரிக்கிறது.
நடிகர்கள்
- கிஷோர் கிடாத்திருக்கையாக
- யக்னா செட்டி செல்வாம்பாவாக
- தருண் சத்ரியா வீரண்ணா
- தமிழ் கிருஷ்ணசாமி (ருத்ரான்) / கிட்ணன்
- அஜய் ரத்னம்
- ரஜினி மகாதேவையா
தயாரிப்பு
தயாரிப்பாளர் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தனது பதாகையான ஏ. ஆர். மூவி பாரடைஸ் என்பதன் கீழ் இந்த திரைப்படத்தை உருவாக்கினார். கன்னட நடிகை யக்னா ஷெட்டி முன்னணி நடிகையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். நடிகர் கிஷோர்,[4] தருண் சத்ரியா, அஜய் ரத்னம் ஆகியோரும் நடிக்க இணைந்தனர். படதின் இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்யப்பட்டபோது. திரைப்பட இயக்குனர் சரண், "வறண்ட, தரிசு நிலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை நான் எழுதும் போது, இளையராஜா மட்டுமே படத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என்று நினைத்தேன், எனது திரைக்கதையை இளையராஜாவிடம் விவரித்தபோது அவர் அதை விரும்பி ஏற்றுக்கொண்டார். நடிகர் கிஷோர் 80கள் முதல் 2000 வரையிலான கால கட்டத்தைக் கொண்டிருக்கும் படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.[5] படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நிறைவடைந்தது, மீதமுள்ள பகுதிகள் சென்னையில் நிறைவடைந்தன.[1]
இசை
படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் .[6]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "கண்ணா உன்னை" | சுர்முகி ராமன் | 0:59 | |
2. | "அம்மனுக்கு செஞ்ச தாலி" | வாசுதேவன், அல்லாa | 5:47 |
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "தினமலர் முன்னோட்டம் - களத்தூர் கிராமம்". தினமலர். 22 February 2015. http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1680&ta=. பார்த்த நாள்: 16 May 2017.
- ↑ "இளையராஜாவுடன் இணையும் மதன் கார்க்கி". Nakkeeran இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170826114800/http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=3742. பார்த்த நாள்: 16 May 2017.
- ↑ "களத்தூர் கிராமம்". மாலை மலர். 28 March 2017. http://cinema.maalaimalar.com/Cinema/Preview/2017/03/28120308/1076517/Kalathur-Gramam.vpf. பார்த்த நாள்: 16 May 2017.
- ↑ "Shooting with the stars". தி இந்து. 26 September 2015. http://www.thehindu.com/features/cinema/shooting-with-the-stars/article7692430.ece. பார்த்த நாள்: 16 May 2017.
- ↑ "Ilaiyaraaja roped in for a rural subject". தி டெக்கன் குரோனிக்கள். http://m.dailyhunt.in/news/india/english/deccan+chronicle-epaper-deccanch/ilaiyaraaja+roped+in+for+a+rural+subject-newsid-65438259. பார்த்த நாள்: 16 May 2017.
- ↑ Tamilmusiq. "Kalathur Gramam". Tamilmusiq. பார்க்கப்பட்ட நாள் 14 March 2019.