கல்லடி (மட்டக்களப்பு)
கல்லடி (Kallady) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இலங்கையின் மிகவும் நீளமான ஒல்லாந்தர் காலத்துப் புகழ் பெற்ற பாலம் இங்கு காணப்படுகின்றது. இராமகிருஷ்ண மிஷனின் ஆன்மீகச் சூழலும், சுவாமி விபுலானந்தரின் இலட்சியத்தில் உருவான சிவாநந்த வித்தியாலயமும் கல்லடி எனும் மகத்தான கிராமத்தின் பெயரைப் பாரெல்லாம் பரவச்செய்துள்ளன. 2004 ஆழிப்பேரலையின் போது இப்பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டதால் தற்போது புதிதாக ஒரு பாலம் சுனாமி நிவாரண நிதியின் மூலம் புனரமைக்கப்படுகின்றது[1][2]. சுவாமி விபுலாநந்தரின் சமாதியும் இங்கு உள்ளது.
கல்லடி | |
---|---|
கிராமம் | |
கல்லடி கடற்கரை | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிசெ பிரிவு | மண்முனை வடக்கு |
கல்லடியின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் ஓரமாக இலங்கையின் பிரசித்தி பெற்ற ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் காணப்படுகின்றது. புகழ்பெற்ற சிவானந்தா வித்தியாலயம், இராமகிருட்டிண மிஷன் ஆகியவை இப்பிரதேசத்தின் பெருமைக்குரிய சொத்துக்கள் ஆகும். அத்துடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி பிரதான அலுவலகம், இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயம், கட்டிடங்கள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் இங்கு காணப்படுகின்றன.
கல்லடியின் கடற்கரை மட்டக்களப்பு மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் முதன்மை பெறுகின்றது.
கல்லடி காட்சியகம்
சுவாமி விபுலாநந்தரின் சமாதி
மேற்கோள்கள்
- ↑ Tsunami awakens fears of mines பிபிசி
- ↑ Batticaloa fishermen tell Prince Charles of their woes பரணிடப்பட்டது 2005-03-06 at the வந்தவழி இயந்திரம், டெய்லி மிரர்
வெளி இணைப்புகள்
- RKM Shivananda National School பரணிடப்பட்டது 2008-07-31 at the வந்தவழி இயந்திரம்
- www.kallady.com பரணிடப்பட்டது 2016-01-10 at the வந்தவழி இயந்திரம்