கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்படும் விருதாகும். முன்னாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி, அவருடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” ஒன்றை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்கு இந்தியாவிலேயே மிக மதிப்புயர்ந்த ரூ 10 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், ஐம்பொன்னாலான நினைவுப் பரிசும் அடங்கிய விருது அளிக்கப்படுகிறது.[1]
விருது பெற்றவர்கள் பட்டியல்
2010 முதல் 2019 வரையிலான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெறுவோர் பட்டியலை வெளியிட்டது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்[2]
வ. எண் | ஆண்டு | விருது பெற்றவர்கள் | நாடு |
---|---|---|---|
1 | 2009 | அஸ்கோ பார்ப்போலா | பின்லாந்து[1] |
2 | 2010 | வீ. எஸ். ராஜம் | பென்சில்வேனியா |
3 | 2011 | பொன். கோதண்டராமன் | தமிழ்நாடு, இந்தியா |
4 | 2012 | இ. சுந்தரமூர்த்தி | தமிழ்நாடு, இந்தியா. |
5 | 2013 | ப. மருதநாயகம் | புதுச்சேரி, இந்தியா. |
6 | 2014 | கு. மோகனராசு | தமிழ்நாடு, இந்தியா. |
7 | 2015 | மறைமலை இலக்குவனார் | தமிழ்நாடு, இந்தியா. |
8 | 2016 | கா. ராஜன் | புதுச்சேரி, இந்தியா. |
9 | 2017 | உல்ரிக் நிக்லாஸ் | ஜெர்மனி |
10 | 2018 | ஈரோடு தமிழன்பன் | தமிழ்நாடு, இந்தியா. |
11 | 2019 | கு. சிவமணி | தமிழ்நாடு, இந்தியா. |
12 | 2020 | ம. இராசேந்திரன் | தமிழ்நாடு, இந்தியா.[3][4] |
13 | 2021 | க. நெடுச்செழியன் | தமிழ்நாடு, இந்தியா.[4] |
14 | 2022 | ழான் லூயிக் செவ்வியார் | பிரான்சு [4] |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "விருதைப் பற்றி". https://cict.in/niruvanam_arakkattalai-virudhu.php. பார்த்த நாள்: 28-09-2021.
- ↑ "விருது பட்டியல்". https://www.hindutamil.in/news/tamilnadu/720835-tamil-development-department-kalaignar-semmozhi-tamil-award-1.html. பார்த்த நாள்: 28-09-2021.
- ↑ அரசுக் கடித எண்.4031/தவ 1.2./2022-2, நாள்:13-08-2022
- ↑ 4.0 4.1 4.2 செம்மொழித் தமிழ்விருதுகள்; தினமணி 2022 ஆகசுடு 22