கலியாணன் கதை

கலியாணன் கதை என்னும் நூல் இன்று இல்லை. எனினும் இப்படி ஒரு நூல் இருந்தது என்பதை யாப்பருங்கல விருத்தி உரையிலிருந்து அறிகிறோம். இரண்டு இடங்களில் இந்த நூலைப்பற்றிய குறிப்புகள் இந்த விருத்தியுரையில் உள்ளன.

  • இது 9ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்
  1. இடையிட்டுத் தொகுத்த எதுகை அந்தாதி கலியாணன் கதை. [1]
  2. உதயணன் கதையும் கலியாணன் கதையும் ‘என்’ என்னும் அசைச்சொல்லான் முடியும் நிலைமண்டிலம். [2]

இந்தக் குறிப்புகளால் கலியாணன் கதை என்னும் நூல் சிலப்பதிகாரம் போல ‘என்’ என முடியும் ஆசிரியப் பாக்களால் ஆன நூல் என்பது தெரியவருகிறது. இதில் கூறப்படும் கலியாணன் சீவகனைப் போல் பல மனைவியரை மணந்தவன் ஆகலாம்.

கருவிநூல்

  • அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம், (பழைய விருத்தியுரையுடன்), Madras Government Oriental manuscripts Series No. 66, 1969
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005

அடிக்குறிப்பு

  1. சூத்திரம் 53
  2. சூத்திரம் 74
"https://tamilar.wiki/index.php?title=கலியாணன்_கதை&oldid=17186" இருந்து மீள்விக்கப்பட்டது