கரையோரம்
கரையோரம் (Karai Oram) என தமிழிலும் அலோன் (Alone) என கன்னடத்திலும் வெளிவந்த இந்தியப் பன்மொழி அதிரடி திரைப்படமாகும். ஜே. கே. எஸ் இயக்கிய இப்படத்தில் நிகேசா படேல் முன்னணிப் பாத்திரத்தை ஏற்க, வசிஷ்டா, கணேஷ், இனியா ஆகியோர் பிற வேடங்களில் நடித்திருந்தனர். சிம்ரன் விருந்தினர் பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கன்னடப் பதிப்பு 2015 நவம்பரில் வெளியிடப்பட்டது, அதே நேரத்தில் தமிழ்ப் பதிப்பு 2016 சனவரியில் வெளியிடப்பட்டது.[1]
கரையோரம் | |
---|---|
இயக்கம் | ஜே.கே.எஸ் |
இசை | சுஷித் செட்டி |
நடிப்பு | நிகேசா படேல் இனியா (நடிகை) வசிஷ்டா கணேஷ் சிம்ரன் |
ஒளிப்பதிவு | ஜெய் ஆனந்த் |
கலையகம் | ராஜ் கம்பைன்ஸ் |
வெளியீடு | 27 நவம்பர் 2015 (கன்னடம்) 1 சனவரி 2016 (தமிழ்) |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் தமிழ் |
நடிகர்கள்
- நிகேசா படேல் - பிரியா / ரியா இரட்டையர்
- இனியா - ரம்யா
- வசிஷ்டா - ஜான்
- அருண் - அருணாக
- கணேஷ் பிரசாத்
- சிம்ரன் அவராகவே (விருந்தினர் தோற்றம்)
- கன்னடப் பதிப்பு
- புல்லட் பிரகாஷ்
- தப்லா நானி
- திலீப்
- அவினாஷ்
- மங்களூரு சுரேஷ்
- சாந்தம்மா
- தமிழ்ப் பதிப்பு
தயாரிப்பு
இந்த படம் 2014 செப்டம்பரில் அலோன் என்ற பெயரிலான கன்னட திகில் படமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது ஒரு பன்மொழிப் படமாக உருவாக்கப்பட்டது. முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நிகேஷா படேல் ஒப்பந்தமானார். காம்னா ஜெத்மலானி மற்றொரு பாத்திரத்தை ஏற்பதாக கருதப்பட்டார். பின்னர் காம்னாவுக்கு பதிலாக இரண்டாவது முன்னணிப் பெண் பாத்திரத்திற்கு இனியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] வசிஸ்டா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவந்தது. எம். எசு. பாசுகர், சிங்கம்புலி ஆகியோரும் படத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.[3]
2015 ஏப்ரலில், சிம்ரன் ஒரு காவல் அதிகாரியாக படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். மேலும் அவர் படத்தில் விருந்தினராக தோன்றுவது தெரியவந்தது.[4] சுனில் செட்டியும் சிபிஐ அதிகாரியாக சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார் எனப்பட்டது. ஆனால் பின்னர் அதிலிருந்து அவர் விலகினார். இப்படத்தை தயாரிக்கும் போது நிகேஷா படேல் மற்றும் இனியா ஆகியோர் இடையே பிளவு ஏற்பட்டது பற்றியும் தகவல்கள் வெளிவந்தன.[5]
வெளியீடு
படத்தின் கன்னட பதிப்பு, அலோன், 2015 நவம்பரில் திரையரங்குகளில் வெளிவந்தது. அது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தியா கிளிட்ஸ்.காமின் ஒரு விமர்சகர் "முதல் பாதி சலிப்படையும் விதமாக இருந்தது" என்று குறிப்பிட்டார், "ஆனால் இரண்டாவது பாதியை இயக்குனர் அற்புதமாக கையாண்டுள்ளார்".[6] 2016 சனவரி முதல் நாளன்று அன்று வெளியான தமிழ் பதிப்பு கன்னட பதிப்பைப் போன்றே விமர்சனங்களைப் பெற்றது.[7][8]
மேற்கோள்கள்
- ↑ "Nikesha in a trilingual". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/nikesha-in-a-trilingual/article7099605.ece.
- ↑ "Nikesha’s next is a horror thriller". http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Nikeshas-next-is-a-horror-thriller/articleshow/41597759.cms.
- ↑ "Bracing for a Curve with a New Role". http://www.newindianexpress.com/entertainment/tamil/2014/11/24/Bracing-for-a-Curve-with-a-New-Role/article2537519.ece.
- ↑ "Simran to do a cameo in Nikesha’s next". http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simran-to-do-a-cameo-in-Nikeshas-next/articleshow/46837557.cms.
- ↑ "Ineya, Nikesha fight on sets?". http://www.indiaglitz.com/ineya-nikesha-fight-on-sets-karaioram-tamil-news-132325.html.
- ↑ http://www.indiaglitz.com/alone-kannada-movie-review-19219.html
- ↑ http://www.view7media.com/karaiyoram-movie-review/
- ↑ http://www.behindframes.com/karaiyoram-review/