கராத்தே ராஜா
கராத்தே ராஜா (Karate Raja) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார்.[2] கமல்ஹாசனின் விருமாண்டி (2004) திரைப்படத்தில் துணை பாத்திரத்தில் நடித்து நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக் காடு என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரமான வீரப்பனாக நடித்தற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.[3][4]
கராத்தே ராஜா | |
---|---|
பிறப்பு | நடராஜன்[1] 19 சனவரி 1978 |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–தற்போது வரை |
தொழில்
கமல்ஹாசனின் விருமாண்டி (2004) திரைப்படத்தில் நடராஜன் நடித்தபிறகு ஒரு நடிகராக தனது தொழில் வாழ்கையில் ஏற்றம் கண்டார். இவருக்கு கமல்ஹாசனால் கராத்தே ராஜா என்ற பெயர் வழங்கப்பட்டது. மேலும் இவர் அந்த ஆண்டில் பிரபலமான இரண்டு தமிழ் படங்களான கில்லி (2004) மற்றும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004) போன்றவற்றில் நடித்தார். பின்னர் ராஜா பிரபுதேவாவின் போக்கிரி (2007) மற்றும் திகில் நகைச்சுவை படமான அம்புலி (2012) உள்ளிட்ட படங்களில் தோன்றினார்.[5] இவர் வர்ணம் (2011) படத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்தார். இவர் திருவம்பாடி தம்பனில் (2012) கிஷோரின் சகோதரராக நடித்தார்.[6] தெலுங்கு மொழி திரைப்படமான உத்யாம சிம்ஹாம் (2019) படத்தில் முக்கிய பாத்திரமான க. சந்திரசேகர் ராவ் கதாபாத்திரத்தில் நடித்தார்.[7][8]
2008 ஆம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக் காடு என்ற தொடரில் முக்கியக் கதாபாத்திரமான வீரப்பனின் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தின் இயக்குநர் வீரப்பனின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக மூன்று ஆண்டுகள் செலவிட்டனர். பின்னர் படப்பிடிப்பிற்காக 110 நாட்கள் காட்டில் கழித்தனர். இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்ததில் நடத்தப்பட்டது.[9][10]
தனிப்பட்ட வாழ்க்கை
கராத்தே ராஜா 2009 சூலை மாதத்தில் திவ்யாவை மணந்தார். இந்த இணையருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.[11][12][13] 2014 ஆகத்தில், கராத்தே ராஜா தனது மனைவியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.[14] பின்னர் அவர் இந்த இணையருக்கு திருமண வாழ்வில் பிரச்சினைகள் இருப்பதாகவும், பல மாதங்களில் சில நாட்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக வாழ்வதாக கூறினார்.[15]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1997 | நேருக்கு நேர் | சூரியாவின் நண்பர் | |
2001 | சிட்டிசன் | அறிவானந்தம் ச.ம.உ இன் நண்பர் | |
2004 | விருமாண்டி | விரிமாண்டிய்ன நண்பர் | |
கில்லி | முத்துப்பாண்டியின் அடியாள் | ||
மதுர | குமாரசாமி | ||
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | ராஜாவின் எடுபிடி | ||
2005 | கண்ணம்மா | பாபு | |
அன்பே வா | கஜா | ||
பம்பரக்கண்ணாலே | |||
2006 | ஆதி | சதா | |
பங்காரம் | தெலுங்கு படம் | ||
2007 | போக்கிரி | தமிழின் நண்பர் | |
பிறகு | டேவிட் | ||
சிவாஜி | ஆதிசேசனுக்கும்,பின்னர் சிவாஜிக்கும் அடியாள் | ||
2008 | மதுரை பொண்ணு சென்னை பையன் | முத்துப்பாண்டி | |
பட்டைய கெளப்பு | |||
2009 | படிக்காதவன் | பாஸ்கர் | |
தோரணை | |||
உன்னைப்போல் ஒருவன் | தீவிரவாதி | ||
2010 | கச்சேரி ஆரம்பம் | சிவமணியின் ஆள் | |
லகோரி | சி. சுப்பிரமணியம் | இந்தி படம் | |
சுறா | குற்றவாளி | ||
பா. ர. பழனிச்சாமி | ஜான்சன் | ||
வெளுத்து கட்டு | ராசு மைனர் | ||
ஆர்வம் | ஆதி | ||
2011 | வர்ணம் | முனியாண்டி | |
ஒஸ்தி | டேனியலின் அடியாள் | ||
2012 | அம்புலி | ||
இஷ்டம் | சங்கர் | ||
திருவம்பாடி தம்பன் | சக்திவேலின் சகோதரர் | மலையாளம் படம் | |
2013 | சோக்காளி | ||
2014 | வெற்றிச் செல்வன் | ||
பூஜை | அண்ணாதாண்டவத்தின் அடியாள் | ||
2015 | சண்டமாருதம் | பாஸ்கர் | |
என் வழி தனி வழி | சிட்டி பாபு | ||
பாலக்காட்டு மாதவன் | பட்டுமாமியின் மகன் | ||
2016 | ஓய் | பாபு | |
புதுசா நான் பொறந்தேன் | |||
2017 | வாங்க வாங்க | ||
சாயா | |||
பணம் பதினொன்றும் செய்யும் | |||
2018 | மன்னர் வகையறா | ||
2019 | ராக்கி: தி ரிவெஞ்ச் | காவல் அதிகாரி | |
உத்யாம சிம்ஹாம் | க. சந்திரசேகர் ராவ் | தெலுங்கு படம் | |
மதுர ராஜா | மலையாளப் படம் | ||
ஐ-ஆர் 8 |
தொலைக்காட்சி
- செம்பருத்தி - மானிக்கம்
- மர்மதேசம்: ஐயந்திரா பரவாய் - வர்மா கலாய் மாணவி
குறிப்புகள்
- ↑ "జీవితాంతం గుర్తుండిపోతుంది". 18 November 2018. https://www.sakshi.com/news/movies/udyama-simham-movie-audio-launch-1135834.
- ↑ "ஜும்மாவின் பின்னர் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் நடிகர் கராத்தே ராஜா. » Sri Lanka Muslim". http://srilankamuslims.lk/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF/.
- ↑ "Sequel to Veerappan drama, TV serial looks at human side - Indian Express". http://archive.indianexpress.com/news/sequel-to-veerappan-drama-tv-serial-looks-at-human-side/225744/2.
- ↑ "வீரப்பன் வாழ்க்கை மர்மத்தை அவிழ்க்கும் சந்தனக்காடு!". 7 January 2008. https://tamil.filmibeat.com/specials/sandanakadu-an-attempt-to-unravel-veerappan-070107.html.
- ↑ "Kollywood Supporting Actor Karate Raja Biography, News, Photos, Videos". https://nettv4u.com/celebrity/tamil/supporting-actor/karate-raja.
- ↑ "Tamil actor Karate Raja accepts Islam - Kerala9.com". 31 March 2015 இம் மூலத்தில் இருந்து 28 பிப்ரவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180228151701/http://www.kerala9.com/news-category/news/movie-news/tamil-actor-karate-raja-accepts-islam.
- ↑ "‘Udyama Simham’: The first look of KCR biopic launched - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/udyama-simham-the-first-look-of-kcr-biopic-launched/articleshow/66602318.cms.
- ↑ "Telangana CM K Chandrasekhar Rao 'biopic' gets YouTube release now | Hyderabad News - Times of India". https://timesofindia.indiatimes.com/city/hyderabad/telangana-cm-k-chandrasekhar-rao-biopic-gets-youtube-release-now/articleshow/68731428.cms.
- ↑ "125 Episodes of Sandhana Kaadu Tamil Television Serial". https://nettv4u.com/about/Tamil/tv-serials/sandhana-kaadu.
- ↑ "Veerappan's wife to seek ban on a TV serial". 10 October 2007. http://twocircles.net/2007oct10/veerappans_wife_seek_ban_tv_serial.html.
- ↑ "கில்லி பட வில்லன் நடிகரின் அழகான குடும்பம். புகைப்படம் இதோ.". 29 October 2019. https://tamil.behindtalkies.com/ghilli-movie-actor-karate-raja-family/.
- ↑ "Vijay's favorite ties the knot - Behindwoods.com - Tamil Movie News - Vijay Karate Raja Kamal Hassan". http://www.behindwoods.com/tamil-movie-news-1/july-09-03/karate-raja-15-07-09.html.
- ↑ "கில்லி படத்தின் வில்லன் மனைவி யாருன்னு தெரியுமா.! புகைப்படம் உள்ளே". 3 March 2018. https://www.cinemapettai.com/killi-movie-raja-wife-latest-picture/.
- ↑ "నటుడి భార్య అదృశ్యం". 15 August 2014. https://www.sakshi.com/news/state/cinema-actors-wife-missing-in-chennai-158000.
- ↑ "Actor's wife is missing". https://www.greatandhra.com/movies/movie-news/actors-wife-is-missing-58992.html.