கமலா சடகோபன்
கமலா சடகோபன் (மறைவு 14, நவம்பர் 2012) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநர் சித்ராலயா கோபுவின் மனைவியும் ஆவார். இவர் தன் எழுத்துப் பணிகளை வை. மு. கோதைநாயகி நடத்திய ஜகன்மோகினி இதழில் துணை ஆசிரியராகத் துவக்கினார். பின்னர் மங்கையர் மலர் இதழில் நீண்டகாலம் இணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[1] இயக்குநர் ஸ்ரீதரால் துவக்கப்பட்ட சித்ராலயா இதழின் ஒரு பங்குதாரராகவும் இருந்துள்ளார்.[2] இவர் சுதேசமித்திரன், கலைமகள், விஜயவிகடன் போன்ற இதழ்களில் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் நாற்பதுக்கும் மேற்பட்ட புதினங்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[3] இவரது 'படிகள்' என்ற புதினத்திற்காக 1978 ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசை அந்த ஆண்டுக்கான சிறந்த புதின எழுத்தாளராகப் பெற்றார்.
கமலா சடகோபன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கமலா சடகோபன் |
---|---|
இறப்பு | 14 நவம்பர் 2012 |
பணி | எழுத்தாளர், இதழாளர், இதழாசிரியர் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | 1978 ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு |
துணைவர் | சித்ராலயா கோபு |
எழுதிய நூல்கள்
புதினங்கள்
- கதவு
- படிகள்
- அகல் விளக்குகள்
- சுவர்
- கிராமத்துப் பறவை
- ஊமை உறவுகள்
- என் இனிய மந்திரகோலே
- என் உயிர் தோழி
- கல்யாண கைதி
- கரை தொடாத அலை
- குயில் தோட்டம்
- மாலை சூடும் வேலை
- மேகலாபரணம்
- மோகன புன்னகை
- சொல்லாமலே சங்கீதா
- உனக்கே உயிரானேன்
- உறங்காத உள்ளம்
- வாரிசு
அபுனைவு
- ஒரு பறவையின் சரணாலயம்
மேற்கோள்கள்
- ↑ டி.ஏ.நரசிம்மன் (16 மார்ச் 2018). "எழுத்தாய் மாறிய வாழ்க்கை". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/cinema/cinema-others/article23262427.ece. பார்த்த நாள்: 18 சனவரி 2019.
- ↑ டி.ஏ.நரசிம்மன் (4 சனவரி 2019). "ஜெயலலிதா சிரித்தது ஏன்?". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25907754.ece. பார்த்த நாள்: 6 சனவரி 2019.
- ↑ "எழுத்தாளர் கமலா சடகோபன் காலமானார்". செய்தி (தினமணி). 15 நவம்பர் 2012. https://www.dinamani.com/cinema/2012/nov/15/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-586148.html. பார்த்த நாள்: 18 சனவரி 2019.