கப்பல் கோவை

கப்பல் கோவை நூலைக் கருமாணிக்கன் கப்பல் கோவை எனவும் வழங்குவர்.

கப்பலூர் என்பது ஓர் ஊரின் பெயர்.[1] இவ்வூரில் வாழ்ந்த வள்ளல் கருமாணிக்கன். இந்தக் கருமாணிக்கன் மீது பாடப்பட்ட நூல் கப்பல் கோவை. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. கப்பல் கோவை நூலில் 398 பாடல்கள் உள்ளன.[2] இந்த நூலின் காலம் 14ஆம் நூற்றாண்டு.

பொருள்கரப்புப் பாடல்

இதில் உள்ள பொருள்கரப்புப் பாடல் தமிழ் எண் குறியீட்டு எழுத்துகளைக் கூறிக் கருத்தை விளங்க வைக்கிறது.

பாடல்

ககரம் பிறந்தசொல் வான்கரு மாணிக்கன் கப்பல்வெற்பில்
உகரம் படைத்திருந் தோம்மில்லை யேஉன்னைப் பெற்றபின்பு
வகரம் பிடித்துவந் தாரிலை யேயென்ன மாயம்செய்தாய்
அகர இகரத் தனமாக்கி வைத்த அருமகவே

பொருள்
ககரம் பிறந்தசொல் – ஒருசொல் (க – ஒன்று)
உகரம் படைத்திருந் தோம்மில்லை – இரண்டுபட்டோமில்லை (உ – இரண்டு)
வகரம் பிடித்துவந் தாரிலை – கால் பிடித்து வருபவர் இல்லை (வ – கால்)
அகர இகரத் தனமாக்கி – எட்டரை தனம், எட்டும் என் இடுப்பைத் தனமாக்கிய மகன் (அ –எட்டு, இ – அரை)

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. திருச்சி மாவட்டம் துவரை எனப்படும் துவரங்குறிச்சியை அடுத்துள்ள கப்பல் என்னும் மலையைக் கொண்டிருக்கும் ஊர்
  2. தமிழ்நாடு அரசாங்க வெளியீடு 1958
"https://tamilar.wiki/index.php?title=கப்பல்_கோவை&oldid=16740" இருந்து மீள்விக்கப்பட்டது