கனடிய ஜனநாயக தமிழ்ப் பண்பாட்டு ஒன்றியம்
கனடிய ஜனநாயக தமிழ்ப் பண்பாட்டு ஒன்றியம் (Canadian Democratic Tamil Cultural Association ) என்பது விடுதலைப் புலிகளுக்கு சார்பான கனடிய தமிழர் அமைப்புகளுக்கு மாற்றாக 2008 ஆண்டில் அமைக்கப்பட்ட அமைப்பு ஆகும். இதன் தலைவராக Dr. சாம் ராசேந்திரன் செயற்படுகிறார்.[1] இன்னொமொரு முக்கிய செயற்பாட்டாளர் லெனின் பென்டிக் (Lenin Benedict) ஆவார்.[2] இலங்கை அரசு, சிங்கள மக்கள், புலி எதிர்ப்பு ஈழ இயக்கங்கள் என பல தரப்பட்ட அமைப்புகளுடன் இது தொடர்புகளை பேணி, புலிகளுக்கு எதிரான பரப்புரையையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கிறது. சனவரி 2009 இல் புலிகளின் தோல்விகளுக்கு பின்பு கனடிய பொது ஊடகங்ளில் இலங்கை அரசுக்கு சார்பாக்க இவர்கள் பரப்புரையை மிகவும் ஆர்வத்துடனும் வெளிப்படையாகவும் மேற்கொள்கிறார்கள். இலங்கை அரசு மேற்கொண்டுவரும் தமிழர் இனவழிப்பு தொடர்பாக இவர்கள் எந்த நடவிடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பீட்டளவில் கனேடியத் தமிழர் மத்தியில் இந்த அமைப்புக்கான ஆதரவு மிகச் சிறியதே.
இவற்றையும் பாக்க
மேற்கோள்கள்
- ↑ "The meeting was chaired by Dr. Sam Rajendran, the President of the Canadian Democratic Tamil Association (CDTA). In his opening address Dr. Rajendran emphasized that" பெப்ரவரி 3 , 2009 இல் அணுகப்பட்டது.www.srilankahcottawa.org
- ↑ "Another cold winter day in Toronto, described sadly as the capital of Eelam by Lenin Benedict diehard member of the Democratic Tamil Cultural Association" Snow Tigers at the doorstep பரணிடப்பட்டது 2009-02-06 at the வந்தவழி இயந்திரம்