கண்மணி (இயக்குநர்)
கண்மணி என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழ் படங்களில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, கண்மணி தெலுங்கு படங்களில் அதிக வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.
கண்மணி | |
---|---|
பிறப்பு | 19 சூன் 1980[1] |
பணி | இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2003-தற்போது வரை |
தொழில்
கண்மணி சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார், இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அவரிடம் குழுபாடகராகவும் பணியாற்றினார். அதன் பிறகு இவர் ஜெமினி (2002) படத் தயாரிப்பின் போது இயக்குநர் சரனின் கீழ் பயிற்சி பெற்றார். குறைந்த செலவில் எடுக்கபட்டபட்ட காதல் நகைச்சுவை திரைப்படமான ஆஹா எத்தனை அழகு (2003) படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். இதில் மிதுன் தேஜஸ்வி, சார்மி கவுர் ஆகியோர் நடித்தனர். பின்னர் தெலுங்கில் நா ஓபிரி (2005), சின்னோடு (2006) ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கினார். பின்னர் சமூக நாடகத் திரைப்படமான கால் சென்டர் (2008) மற்றும் காதல் நகைச்சுவை திரைப்படமான ஓடிபோலாமா (2009) ஆகியவற்றை இயக்கினார்.[2]
2015 ஆம் ஆண்டில் இவர் தெலுங்கு திரைப்படமான பீருவாவை உருவாக்கினார். பின்னர் தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்ற திகில் நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கினார். [3][4]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2003 | ஆஹா எத்தனை அழகு | தமிழ் | |
2005 | நா ஓபிரி | தெலுங்கு | |
2006 | சின்னோடு | தெலுங்கு | |
2008 | கால் செண்டர் | தெலுங்கு | |
2009 | ஒடிபோலாமா | தமிழ் | |
2013 | சுக்கலந்தி அம்மாயி சக்கனைனா அப்பாய் | தெலுங்கு | |
2015 | பீருவா | தெலுங்கு | கூட கேமியோ |
2016 | பேய்கள் ஜாக்கிரதை | தமிழ் | |
2018 | தேசாமுதூர்ஸ் |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-06-26. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
- ↑ "Kanmani interview — Telugu Cinema interview — Telugu film director". idlebrain.com. Archived from the original on 2 January 2017. பார்க்கப்பட்ட நாள் 2015-09-26.
- ↑ "Peigal Jaakirathai : Kanmani To Direct Another Horror Film | Silverscreen.in". silverscreen.in. பார்க்கப்பட்ட நாள் 2015-09-26.
- ↑ "Beeruva: A closet full of gags — The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-26.