ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்
ஒழிந்தியாப்பட்டு அரசலீசுவரர் கோயில் (அரசிலி என்றும் அழைக்கப்படுகிறது) சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1] தொண்டை நாட்டுத்தலங்களில் இது 31வது தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருஅரசிலி ஒழிந்தியாப்பட்டு அரசலீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருஅரசிலி ஒழிந்தியாப்பட்டு அரசலீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஒழிந்தியாப்பட்டு |
மாவட்டம்: | விழுப்புரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அரசிலிநாதர் (அரசலீசுவரர்). |
தாயார்: | பெரியநாயகி |
தல விருட்சம்: | அரசு |
தீர்த்தம்: | அரசரடித் தீர்த்தம் (வாமன தீர்த்தம்) |
ஆகமம்: | காரணம், காமீக ஆகமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
சிறப்பு
சாளுவ மன்னனால் கட்டப்பட்ட கோயில். பிரதோச வழிபாடு இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது. இத்தலத்தில் வாமேதவ முனிவர் என்பார் வழிபட்டுப் பிரதோச நாளில் பேறுபெற்றார் என்பது தொன்வரலாறு. இங்கு இறைவன் 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின்கீழ் சுயம்புலிங்க வடிவில் சிறிய மூர்த்தியாக இருப்பது சிறப்பாகும்.
அமைவிடம்
இது விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்திலுள்ள ஒழிந்தியாம்பட்டில்[2] அமைந்துள்ளது.
அஞ்சல் முகவரி:
- அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில்
- ஒழிந்தியாப் பட்டு - அஞ்சல்
- வானூர் (வழி)
- வானூர் வட்டம்
- விழுப்புரம் மாவட்டம் -605 109
தேவாரப்பாடல்
இத்தலம் குறித்து திருஞான சம்பந்தர் பாடியுள்ள பாடல்:
மிக்க காலனை வீட்டி மெய்கடக் காமனை விழித்துப்
புக்கவூர் இடு பிச்சை உண்பது பொன்திகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந்து ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.