ஒரு நாள் இரவில்
ஒரு நாள் இரவில் 2015 ஆம் ஆண்டு ஆண்டோனியின் படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில், சத்யராஜ் மற்றும் அனுமோள் நடிப்பில், ஏ. எல். அழகப்பன் மற்றும் சாம் பவுல் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[2][3][4][5][6][7][8]. இப்படம் ஜாய் மேத்யூ இயக்கிய மலையாளத் திரைப்படமான ஷட்டர் (2012) என்பதன் மறுஆக்கம் ஆகும்[9][10][11][12][13][14].
ஒரு நாள் இரவில் | |
---|---|
இயக்கம் | ஆண்டோனி |
தயாரிப்பு | ஏ. எல். விஜய் (வழங்கியவர்) ஏ. எல். அழகப்பன் சாம் பவுல் |
கதை | யூகி சேது (வசனம்) |
மூலக்கதை | ஷட்டர் இயக்குனர் ஜாய் மேத்யூ |
திரைக்கதை | ஆண்டோனி |
இசை | நவீன் |
நடிப்பு | சத்யராஜ் அனுமோள் யூகி சேது வருண் |
ஒளிப்பதிவு | எம். எஸ். பிரபு |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | பவுல்சன்ஸ் மீடியா |
விநியோகம் | ஏ. எல். விஜய் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் |
வெளியீடு | 20 நவம்பர் 2015[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
சிங்கப்பூரிலிருந்து தன் சொந்த ஊரான சென்னைக்கு வருகிறார் சேகர் (சத்யராஜ்). தன் மகளின் கல்லூரிப்படிப்பை இடையில் நிறுத்தி அவளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்கிறார். தன் வீட்டின் அருகிலுள்ள கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அவற்றில் ஒரு கடையை மட்டும் தன் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துள்ளார். சூரி (வருண்) என்ற ஆட்டோ ஓட்டுநர் அவருக்குப் பழக்கமாகிறான். சேது (யூகி சேது) என்ற இயக்குனர் தன் பையை சூரியின் ஆட்டோவில் தவறவிடுகிறார். அந்தப்பையில் அவர் எழுதிய கதை உள்ளது. எனவே சூரியைத் தேடுகிறார்.
தன் பெண்ணின் திருமணம் தொடர்பாக வீட்டில் ஏற்படும் வாக்குவாதத்தால் கோபமாக வீட்டைவிட்டு வெளியேறும் சேகர், சூரியுடன் ஆட்டோவில் செல்லும்போது பேருந்து நிறுத்தத்தில் ஒரு பால்வினைத் தொழில் செய்யும் பெண் தங்கத்தைப் (அனுமோள்) பார்க்கின்றனர். அந்தப் பெண்ணின் மீது சபலம் கொள்ளும் சேகர், சூரியின் உதவியுடன் தன் சொந்த உபயோகத்திற்காக வைத்துள்ள கடைக்கு அழைத்துவருகிறான். அவர்கள் இருவரையும் கடைக்குள் வைத்து வெளியே கதவைத் தாழிட்டுப் பூட்டுகிறான் சூரி.
பூட்டிய பின் சாவியை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவருக்கும் உணவு வாங்க செல்லும்போது சூரியைக் காணும் சேது தன் பையைக் கேட்கிறான். அந்தப் பையை சேகரின் கடைக்குள் வைத்திருப்பதாகக் கூறும் சூரி அதை எடுத்துவருவதாகக் கூறி செல்லும்வழியில் அவனைக் காவல்துறை கைது செய்து காவல் நிலையத்தில் அன்று இரவு முழுதும் அடைக்கப்படுகிறான். சூரி திரும்பிவராததால் சேகரும் தங்கமும் வெளியேவர முடியாமல் கடைக்குள் சிக்கிக்கொள்கின்றனர். அப்போது சூரி வைத்துவிட்டுப் போன பையைக் காணும் தங்கம் அதனுள்ளே இருக்கும் சேதுவின் கதையைப் படித்ததும், அதைத் தன் பைக்குள் மறைத்து வைக்கிறாள்.
சூரி திரும்பிவந்தனா? சேகரும் தங்கமும் எவ்வாறு வெளியே வந்தனர்? சேதுவுக்கு கதை கிடைத்ததா? சேகரின் மகள் திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
- சத்யராஜ் - சேகர்
- யூகி சேது - சேது பாரதி
- அனுமோள் - தங்கம்
- கல்யாணி நடராஜன் - சேகரின் மனைவி
- வருண் - சூரி
- தீக்ஷிதா கோத்தாரி - வர்ஷா
- ஆர். சுந்தர்ராஜன் - பட இயக்குனர்
- கவுதம் வாசுதேவ் மேனன் - சிறப்புத் தோற்றம்
- சதிஷ் கிருஷ்ணன் - சிறப்புத் தோற்றம்
விமர்சனம்
பிலிம்பீட்: ஒரு முறை பார்த்து ரசிக்கக் கூடிய படம்[15].
தி இந்து தமிழ்: நட்சத்திரத் தேர்வில் இயக்குநரின் ஆளுமை பளிச்சிடுகிறது[16]
விகடன்: படத்தொகுப்பாளராக அதிர்வை ஏற்படுத்திய ஆண்டனி, முதல்படத்திலேயே இயக்குநராகவும் வரவேற்புப் பெறுகிறார்[17].
தமிழ்.சமயம்.காம்: தரமான படம்[18].
தமிழ் சினிடாக்: 'ஒரு நாள் இரவில்' நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய படம்[19].
மாலைமலர்: பெண்களுக்கு கல்வி முக்கியம் என்ற சமூக கருத்தையும் பதிவு செய்திருப்பதை பாராட்டலாம்[20]
வண்ணத்திரை: அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடியாத அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது ‘ஒரு நாள் இரவில்’[21].
மேற்கோள்கள்
- ↑ "Oru Naal Iravil Movie Database". http://www.tamilcinemainfo.com/movies/16300-oru-naal-iravil. பார்த்த நாள்: 20 November 2015.
- ↑ "ஒருநாள் இரவில்". http://newtamilcinema.in/oru-naal-iravil-review/.
- ↑ "ஒருநாள் இரவில்". http://newtamilcinema.in/night-show-now-orunaal-iravil/.
- ↑ "ஒருநாள் இரவில்" இம் மூலத்தில் இருந்து 2020-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201205161020/https://www.top10cinema.com/article/tl/35848/oru-naal-iravil-review.
- ↑ "ஒருநாள் இரவில்". http://www.behindframes.com/oru-naal-iravil-review/.
- ↑ "ஒருநாள் இரவில்". https://www.muhavaimurasu.in/2015/11/blog-post_21.html.
- ↑ "ஒருநாள் இரவில்". http://cinema.dinakaran.com/Movie-review.aspx?id=19530&id1=13.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஒருநாள் இரவில்". http://www.tamilmithran.com/article-source/NDkyMzk3/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D!.
- ↑ "ஷட்டர் மறு ஆக்கம்". http://kollywoodvoice.com/oru-naal-iravil-movie-review/.
- ↑ "ஷட்டர் மறு ஆக்கம்". http://stg.dailythanthi.com/Cinema/Review/2015/11/23134602/tamil-new-movie-oru-naal-iravil-in-review.vpf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஒருநாள் இரவில்". http://cinesnacks.net/exclusive/oru-naal-iravil-review/45834/.
- ↑ "ஷட்டர் மறு ஆக்கம்". https://cinema.dinamalar.com/tamil-news/39850/cinema/Kollywood/Oru-naal-iravil-is-not-a-copy-of-Shutter-says-director.htm.
- ↑ "ஷட்டர் மறு ஆக்கம்". http://www.tharasu.com/2015/11/OruNaalIravil.html.
- ↑ "ஒருநாள் இரவில்". http://www.cinemamurasam.com/archives/4036.
- ↑ "ஒருநாள் இரவில்". https://tamil.filmibeat.com/reviews/oru-naal-iravil-review-037707.html.
- ↑ "விமர்சனம்". https://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article7905249.ece.
- ↑ "விமர்சனம்". https://cinema.vikatan.com/movie-review/55361-naal-iravil-film-review.art.html.
- ↑ "விமர்சனம்". https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/oru-naal-iravil-film-review/moviereview/49876244.cms.
- ↑ "விமர்சனம்". http://www.tamilcinetalk.com/oru-naal-iravil-movie-reviews/.
- ↑ "விமர்சனம்". https://www.maalaimalar.com/Cinema/Review/2015/11/20201415/cinema-review-Oru-naal-iravil.vpf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "விமர்சனம்". http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=5995&id1=45&issue=20151130.